ஒரே நெடுஞ்சாலையில் மாறுபடும் வேக வரம்புகள் – காரணம் என்ன தெரியுமா?
Highway Speed Limits : நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சில இடங்களில் வேகக் கட்டுப்பாடு மாறுபட்டிருக்கும். சில இடங்களில் அதிகபட் வேகம் 120 கி.மீ எனவும் சில இடங்களில் அதிகபட்ச வேகம் 100 அல்லது 80 கி.மீ எனவும் குறிப்பிட்டிருக்கும். அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சாலைப்போக்குவரத்து மேம்பாடு அடைந்துள்ளது. நெடுஞ்சாலைகளின் தரத்தால் வெகுவாக நம் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடிகிறது. இருப்பினும் சாலைகளில் சில இடங்களில் வேக வரம்பு 120 கி.மீ எனவும், சில இடங்களில் 100 கி.மீ அல்லது. 80 கி.மீ என்றும் இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி யோசித்து இருக்கிறீர்களா? அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஒரே நெடுஞ்சாலையில் மாறுபடும் வேக வரம்புகள்
உதாரணமாக அதிவிரைவு சாலைகளில் கார்களுக்கு மணிக்கு 120 கி.மீ வரையிலான அதிகபட்ச வேகம் அனுமதிக்கப்படுகிறது. அதே நேரம் பல சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த வரம்பு மணிக்கு 100 கி.மீ அல்லது 80 கி.மீ ஆக குறைக்கப்பட்டிருக்கும். ஏன் இந்த மாற்றம் என உங்களுக்கு கேள்வி எழுந்திருக்கலாம். வேக வரம்புகளை தீர்மானிப்பதில் சாலையின் அமைப்பு, வடிவமைப்பு, போக்குவரத்து, வளைவுகள் அதிகம் கொண்ட சாலைகள் மற்றும் மிக முக்கியமாகப் பொதுப் பாதுகாப்பு போன்ற காரணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் கருத்தில் கொள்கின்றனர்.
இதையும் படிக்க : ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!
குறிப்பாக அதிவிரைவு சாலைகள், வாகனங்களோ அல்லது நடந்துசெல்லும் திடீரெனச் சாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. அதாவது பெரும்பாலும் ஊர் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் சாலை இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். வழியில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சாலையைக் கடப்பது போன்ற சிக்கல்கள் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாகவே அங்கு அதிக வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இதற்கு மாறாக, சாதாரண தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாகச் செல்கின்றன. அவற்றில் சாலையை கடக்க உதவும் சந்திப்புகள் அதிகம் இருக்கும். இப்பகுதிகளில் வாகனங்கள், பாதசாரிகள் அல்லது விலங்குகள் திடீரெனச் சாலையை கடக்கலாம். எனவே, விபத்து அபாயத்தைக் குறைக்க வேக வரம்புகள் குறைவாக வைக்கப்படுகின்றன.
இதையும் படிக்க : SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?
சாலைகளை வடிவமைக்கும்போது, ஒரு வாகனம் வளைவில் பாதுகாப்பாகச் செல்லக்கூடிய வேகத்தை பொறியாளர்கள் கருத்தில் கொள்கின்றனர். விரைவுச் சாலைகள் பொதுவாக ஓட்டுநர்களுக்கு சிறந்த பார்வைத்திறனை வழங்கும் வகையிலான பரந்த வளைவுகளைக் கொண்டுள்ளன. இதனால் ஓட்டுநர்கள் சாலையைத் தெளிவாகப் பார்க்கவும், அதிவேகத்திலும் வாகனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடிகிறது.
இதற்கு மாறாக, சாதாரண சாலைகளில், குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில், வளைவுகள் மிகவும் கூர்மையாக இருக்கலாம். அத்தகைய இடங்களில், வாகனம் சறுக்குவதற்கோ அல்லது கட்டுப்பாட்டை இழப்பதற்கோ வழிவகுக்கும். எனவே, வளைவுகள், பாலங்கள், சரிவுகள் மற்றும் பிற முக்கியமான பகுதிகளில் வேக வரம்புகள் குறைக்கப்படுகின்றன.



