AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!

Gold Price Hiked In Chennai Today | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price : தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Aug 2026 10:40 AM IST

சென்னை, ஆகஸ்ட் 15 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 14, 2026) தங்கம் விலை கடும்  சரிவை சந்தித்த நிலையில், இன்று (ஆகச்ட் 15, 2026) விலை உயர்ந்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் உள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

புவிசார் பதற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில், தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?

ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும் ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-த்தை தாண்டாமல் இருந்தது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை ரூ.14,000-த்தை தாண்டியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us