AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளை குறிவைக்கும் சண்டிபுரா வைரஸ்..இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க!

Chandipura Virus: சண்டிபுரா வைரஸ் முக்கியமாக குழந்தைகளை பாதித்து, காய்ச்சல், வாந்தி, தலைவலி, வலிப்பு மற்றும் சுயநினைவு குறைதல் போன்ற தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். இது பெரும்பாலும் மணல் ஈ உள்ளிட்ட பூச்சிகள் மூலம் பரவுவதாகக் கூறப்படும் நிலையில், நோய் வேகமாக தீவிரமடையக்கூடியதால் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

குழந்தைகளை குறிவைக்கும் சண்டிபுரா வைரஸ்..இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க!
குழந்தைImage Source: iStock
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Aug 2026 11:01 AM IST

குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் தொற்று தொடர்பாக 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டு மழைக்காலத்தில் இந்த வைரஸ் காரணமாக குழந்தைகளிடம் தீவிர உடல்நலப் பாதிப்புகள் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பதிவான சந்தேகத்திற்குரிய பல வழக்குகளில் சிலவற்றில் சண்டிபுரா வைரஸ் தொற்று ஆய்வகப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது.

சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன?

சண்டிபுரா வைரஸ் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தீவிர நோய் நிலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். இது முதன்முதலில் 1965ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் சந்திபுரா பகுதியில் கண்டறியப்பட்டதால் அந்தப் பெயர் பெற்றது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட சிலரிடம் ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டாலும், சில குழந்தைகளில் நோய் வேகமாக தீவிரமடைந்து மூளையைப் பாதிக்கும் நிலைக்கு செல்லக்கூடும்.

எப்படி பரவுகிறது?

சண்டிபுரா வைரஸ் முக்கியமாக பாதிக்கப்பட்ட மணல் ஈ எனப்படும் Sandfly மூலம் மனிதர்களுக்கு பரவுவதாகக் கருதப்படுகிறது. கொசுக்கள் மற்றும் சில உண்ணிகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக மழைக்காலத்தில் சுற்றுப்புறங்களில் ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் அதிகரிக்கும் சூழல் இருப்பதால், அவற்றின் கட்டுப்பாடு முக்கியமானதாகிறது. மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாகப் பரவுவது வழக்கமான பாதையாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

குழந்தைகளுக்கு ஏன் ஆபத்து?

சண்டிபுரா தொற்றின் தீவிரமான வடிவம் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளை அழற்சி தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றிய பின்னர், சிலருக்கு தூக்க கலக்கம், குழப்பம், வலிப்பு மற்றும் சுயநினைவு குறைதல் போன்ற நரம்பியல் அறிகுறிகள் உருவாகலாம். நோய் வேகமாக முன்னேறக்கூடியதால், குழந்தைகளிடம் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால் வீட்டிலேயே காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது அவசியம்.

முக்கிய அறிகுறிகள் என்ன?

திடீரென அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தொடர்ந்து வாந்தி, அதிக தூக்கம் அல்லது மயக்கம், குழப்பம், வலிப்பு மற்றும் சுயநினைவு இழப்பு போன்றவை கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகளாகும். குறிப்பாக காய்ச்சலுடன் குழந்தையின் நடத்தை அல்லது சுயநினைவில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் அது தீவிர அறிகுறியாக இருக்கலாம். அறிகுறிகள் வேகமாக மோசமடையக்கூடியதால், ஆரம்ப நிலையிலேயே மருத்துவ மதிப்பீடு பெறுவது மிகவும் முக்கியம்.

Also Read: பிஞ்சிலேயே பழுக்கும் பிரஷரும் சுகரும்: குழந்தைகளைக் காக்கப் போவது யார்?

சிகிச்சை மற்றும் தடுப்பு

சண்டிபுரா வைரஸுக்கு தற்போது குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்து அல்லது தடுப்பூசி இல்லை. எனவே காய்ச்சலைக் கட்டுப்படுத்துதல், உடலில் நீர்ச்சத்து சரியாக இருப்பதை உறுதி செய்தல், வலிப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தேவையானபோது தீவிர சிகிச்சை அல்லது சுவாச உதவி வழங்குதல் போன்ற ஆதரவு சிகிச்சைகளே முக்கியமாக உள்ளன.

குழந்தைகள் முழுக்கை ஆடைகளை அணிவது, கொசு மற்றும் மணல் ஈக்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு வலை பயன்படுத்துவது, வீட்டைச் சுற்றிலும் தூய்மையைப் பராமரிப்பது மற்றும் பூச்சிகள் பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தொற்று அபாயத்தைக் குறைக்க உதவும்.

Follow Us