AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சௌமியா அன்புமணியின் தந்தைக்கு உயரிய ‘தகைசால் தமிழர்’ விருது.. மேடையில் கௌரவித்த முதல்வர் விஜய்!!

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், தமிழினத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவரும் சௌமியா அன்புமணியின் தந்தையுமான எம்.கிருஷ்ணசாமிக்கு 'தகைசால் தமிழர்' விருதை முதல்வர் விஜய் வழங்கினார். மேலும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா விருதுகளையும் அவர் வழங்கினார்.

சௌமியா அன்புமணியின் தந்தைக்கு உயரிய ‘தகைசால் தமிழர்’ விருது.. மேடையில் கௌரவித்த முதல்வர் விஜய்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Aug 2026 11:56 AM IST

சென்னை, ஆகஸ்ட் 15: இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற பிரதான விழாவில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றி வைத்தார். தேசியக் கொடியேற்றத்திற்குப் பிறகு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றிய சான்றோர்களுக்கும், மருத்துவம், சமூகச் சேவை, துணிச்சல் செயல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாகச் செயல்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் சுதந்திர தின சிறப்பு விருதுகளை முதல்வர் விஜய் வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிக்க: 80வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!!

தகைசால் தமிழர் விருது:

இந்த ஆண்டுக்கான மிக உயரிய ‘தகைசால் தமிழர்’ விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணியின் தந்தையுமான எம். கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையையும் பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் விஜய் வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து, மருத்துவத்துறையில் குறிப்பாக நீரிழிவு நோய் சிகிச்சையில் சிறந்து விளங்கியதற்காக டாக்டர் வி. மோகனுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது அறிவிக்கப்பட்டு, அவரின் சார்பில் அவரது மகள் அவ்விருதைப் பெற்றுக் கொண்டார். துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, கோவையைச் சேர்ந்த செல்வி நவ்ஷீன் பானுசாந்திற்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலன்:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகச் சேவையாற்றிய சிறந்த மருத்துவருக்கான அரசு விருதை மறுவாழ்வு மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர் பி. திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். சிறந்த நிறுவனத்திற்கான விருது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி அறக்கட்டளைக்கும், சிறந்த சமூகப் பணியாளர் விருது திருவண்ணாமலையைச் சேர்ந்த பி. மணிமாரனுக்கும் வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்தியதற்காக திருப்பூரின் எஸ்.எம். கார்ட்மண்ட்ஸ் நிறுவனத்திற்கும், சிறந்த கூoperative வங்கிக்காக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதனுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் சதீஷ் பிரபு குழுவினருக்கும், கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் துறை மருத்துவர் எம். கீதாஞ்சலிக்கும் முதலமைச்சரின் நல்லாளுமை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதையும் படிக்க: கோவை மாநகராட்சியில் 54 அரசு ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்.. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

உள்ளாட்சி அமைப்புகளுக்கான அங்கீகாரம்:

சமூகச் சேவையில் சிறப்பாகச் செயல்பட்ட இளைஞர்களுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த இமானுவேல் நெல்சன் ஏசா, தூத்துக்குடியைச் சேர்ந்த ஏ. சரவணகுமார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த நிர்மல் கதிரவேல் ஆகியோரும்; பெண்கள் பிரிவில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேஸ்வரி மகாதேவன் மற்றும் மதுரையைச் சேர்ந்த கே. சிந்தா ஆகியோரும் இவ்விருதுகளைப் பெற்றனர். பெண்களுக்காகச் சிறப்பான சேவை புரிந்ததற்காக ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கும், ஓசூரைச் சேர்ந்த இ. ராதாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இறுதியாக, சிறந்த மாநகராட்சிகளாகக் கோயம்புத்தூர் (முதல் பரிசு) மற்றும் தஞ்சாவூரும், சிறந்த நகராட்சியாகத் தேனியின் போடிநாயக்கனூரும், சிறந்த பேரூராட்சியாகத் தஞ்சாவூரின் திருவிடைமருதூரும் முதல் பரிசுகளை வென்று முதல்வரிடமிருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டன.

Follow Us