AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் கிடுகிடுவென உயர்வு – எவ்வளவு தெரியுமா?

Gold Rate : கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஆகஸ்ட் 14, 2026 இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில் மாலையே மீண்டும் ரூ.1,280 உயர்ந்தது.

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் கிடுகிடுவென உயர்வு – எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Aug 2026 19:35 PM IST

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 14, 2026 இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இது நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் தங்க நகை என்பது வெறும் அலங்காரப் பொருள் அல்ல. அது ஒரு சிறந்த முதலீடு. எப்போதுமே தங்கம் விலை ஏற்றத்தில் இருக்கும் என்பதால், தற்சமயம் தங்கம் வாங்கினால் எதிர்காலத்தில் நமக்கு பெரிதும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. அந்த வகையில் ஆகஸ்ட் 12, 2026 அன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13, 2026 நேற்றும் தங்கம் விலை ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிக்க : இனி வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி போட முடியாது.. செக் வைத்த ஆர்பிஐ!

காலையில் குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், ஆகஸ்ட் 14, 2026 இன்று காலை தங்கம் விலை குறைந்தது. அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.180 குறைந்து ரூ.14,040க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது.

மாலையில் மீண்டும் உயர்வு

விலை குறைந்த நிலையில் தங்கம் வாங்க இது சரியான தருணம் என தங்கம் வாங்க திட்டமிட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 14, 2026 இன்று மாலையே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. காலையுடன் ஒப்பிடுகையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனையாகிறது. காலையில் ஒரு சவரன் தங்கம் விலை குறைந்து ரூ.1,12,320க்கு விற்பனையான நிலையில், மாலையிலேயே மீண்டும் உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனையாகிறது.

இதையும் படிக்க : இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போல வெள்ளியின் விலையும் ஆகஸ்ட் 14, 2026 இன்று காலை குறைந்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.255க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து 2,55,000க்கும் விர்பனை செய்யப்பட்டது. ஆனால் வெள்ளியின் விலை மாற்றம் செய்யப்படவில்லை.

Follow Us