அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 60 நாள் வேலை இழப்பு அவகாசத்தை நீக்குவதற்கான புதிய முன்மொழிவு டிரம்ப் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தற்போது வெள்ளை மாளிகையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய விதிகளின்படி, எச்1பி போன்ற வேலை விசாவில் இருக்கும் ஒருவர் வேலை இழந்தால், புதிய வேலை தேடுவதற்கோ அல்லது தனது விசா நிலையை மாற்றுவதற்கோ அதிகபட்சம் 60 நாட்கள் வரை அவகாசம் உள்ளது.