AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,440 சரிவு!

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 14, 2026) சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,440 சரிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Aug 2026 10:27 AM IST

சென்னை, ஆகஸ்ட் 14 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 14, 2026) அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ள நிலையில்,  வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம்

ஈரான் போரால் ஏற்பட்ட புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிரடி உயர்வை சந்தித்தது உள்ளிட்டவற்றின் காரணமாக உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து விலகி இருந்தது. இதன் காரணமாக, தங்கம் விலை கடந்த இரண்டு மாதங்களாக சற்று மந்தமாக இருந்தது.

இதையும் படிங்க : லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

தற்போது ஈரான் போரால் ஏற்பட்ட பதற்றம் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் சீராக உள்ளது. அதுமட்டுமன்றி, அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றின் காரணமாக உலக முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதன் காரணமாக 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.180 சரிந்து ஒரு கிராம் ரூ.14,040-க்கும், சவரனுக்கு ரூ.1,440 சரிவை சந்தித்து ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : 5 கிலோ கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி.. என்ன என்ன ஆவணங்கள் தேவை?

முன்னதாக ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜுலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை கண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டு விலை உயர்வை அடைய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us