80- ஆவது சுதந்திர தின விழா.. முதல்வர் விஜய்யிடம் விருது பெற்றவர்கள் விவரம்!
Award Recipients Full Details : நாட்டின் 80- ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் இருந்து விருது பெற்றவர்கள் யார்.. யார். . எதெற்கெல்லாம் விருது வழங்கப்பட்டுள்ளது என்பன விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நாட்டின் 80- ஆவது சுதந்திர தினம் இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 15- ஆம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, பலருக்கு தமிழக அரசின் விருதுகளை முதல்வர் விஜய் வழங்கினார். இதில், 2026- ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது: பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்ட 6 மற்றும் 2- ஆவது மண்டலங்கள். கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி, போடிநாயக்கனூர், விழுப்புரம், ஆரணி நகராட்சி, திருவிடைமருதூர், குருங்கல், செட்டிபாளையம் பேரூராட்சிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன் ரெட்டி, பேரூராட்சி இயக்குனர் பிரியங்கா ஆகியோர் பெற்றனர்.
மேலும் படிக்க: 80வது சுதந்திர தின விழா.. முதல் முறை கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்!




முதல்வரின் நல் ஆளுமை விருது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தன்னீர், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு வழங்கப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்ப அப்துல் கலாம் விருது: சர்க்கரை நோயியல் துறை சிறப்பு நிபுணர் மருத்துவர் மோகனுக்கு வழங்கப்பட்டது. விருதுடன் 8 கிராமம் தங்கப்பதக்கம், ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.
கல்பனா சாவ்லா விருது: கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்துவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த மருத்துவருக்கான விருது: கே. கே. நகர் அரசு மருத்துவமனை மருத்துவர் திருநாவுக்கரசுக்கு வழங்கப்பட்டது.
மாநில இளைஞருக்கான விருது: சரவணகுமார், இம்மானுவேல் நெல்சன், நிர்மல் கதிர்வேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் பெற்றுக் கொண்டார்.
மாநில இளைஞர்- பெண்கள் பிரிவுக்கான விருது: சிந்தா, ராஜேஸ்வரி மகாதேவன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த சமூக பணியாளுக்கான விருது: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் பெற்றுக் கொண்டார்.
சிறந்த நிறுவனத்துக்கான விருது: விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் உள்ள சிருஷ்டி பவுண்டேஷனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருது: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.
அதிக அளவு பணி அமர்த்திய சிறந்த நிறுவனத்துக்கான விருது: திருப்பூர் எஸ். சி. எம். கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: “லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!