AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

80வது சுதந்திர தின விழா.. முதல் முறை கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்!

Tamil Nadu CM Joseph Vijay Hoisted National Flag | இந்தியா தனது 80வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார். காவல்துறை அணிவகுப்புடன் வந்து இந்த விழாவில் அவர் பங்கேற்றார்.

80வது சுதந்திர தின விழா.. முதல் முறை கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்!
கொடியேற்றிய முதல்வர் விஜய்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Aug 2026 08:47 AM IST

சென்னை, ஆகஸ்ட் 15 : இந்தியா இன்று (ஆகஸ்ட் 15, 2026) தனது 80வது சுதந்திர தின விழாவை (80th Independence Day) கொண்டாடி வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றிய நிலையில், சென்னையில் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கொடியேற்றினார். தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அவர் பங்கேற்கும் முதல் சுதந்திர தினம் இதுவாகும். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் கொடி ஏற்றிய முதல் சுதந்திர தினம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காவல்துறை அணிவகுப்புடன் கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர்

சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, காவல்துறையினர் வாகன அணிவகுப்பு வழங்கினர். அதன்படி, கோட்டை கொத்தளத்திற்கு வந்த அவரை வரவேற்ற தலைமைச் செயலாளர், அங்கிருந்த முப்படை அதிகாரிகளை முதலமைச்சர் விஜய்க்கு அறிமுகம் செய்தார். அதன் பிறகு, முதலமைச்சர் முன்னிலையில் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பை முதலமைச்சர் வாகனத்தில் சென்றபடி பார்வையிட்டார்.

Follow Us