ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை… எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம்!
Edappadi Palaniswami Criticizes CM Vijay : தமிழக வெற்றிக் கழக அரசு ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதையுமே சாதனையாக செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறிய கருத்துக்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழக அரசு ரீல்ஸ் வெளியிட்டதையும், ரீல் விட்டதையும் சாதனையாக செய்துள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி என்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி என்றும் தெரிவித்து இருந்தனர். இதனை எப்படி ஏற்க முடியும், ? விவசாயிகள் வருமானம் இல்லாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் மெத்தனம் இல்லாமல், அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது. தற்போது வரை எந்த போராட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார். ஏதோ என்று ஒரு கட்சியை ஆரம்பித்தனர்.
காவிரி விவகாரத்தில் முதல்வருக்கு ஒன்றுமே தெரியவில்லை
அவர்களுக்கு தமிழக மக்கள் ஒரு வாய்ப்பை கொடுத்து விட்டார்கள். இந்த வாய்ப்பு கிடைத்த பின்னர் மற்ற கட்சிகள் சொல்வதை கேட்க வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக இவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால் அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி தான் நடவடிக்கை எடுக்கின்றனர்.
மேலும் படிக்க: “லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!




தமிழகத்து வரும் தண்ணீர் உபரி நீரே ஆகும்
தற்போது, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் வெறும் உபரி நீரே ஆகும். அவர்கள் தேவைக்கு போக மீதமுள்ள தண்ணீரையே தமிழகத்துக்கு உபரிநீராக கர்நாடகா அரசு திறந்து விட்டு வருகிறது. எனவே, கர்நாடகா காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்கள் சொல்வதையாவது கேட்க வேண்டும். எதையுமே செயல்படுத்தாத முதல் அமைச்சராக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளார். கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப உள்ளோம்.
மாணவர் கொலை குறித்து பேரவையில் கேள்வி எழுப்புவோம்
இதே போல, சென்னையில் பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் பேரவையில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளோம். ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தமிழக வெற்றிக் கழக அரசின் சாதனையாக உள்ளது. போதை பொருட்கள் பழக்கத்தால் கல்லூரி மாணவர் மற்றும் பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சென்னையில் பள்ளி மாணவர் கொடூரக் கொலை.. “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!!