முதல் முறை எம்எல்ஏக்களுக்கு புதிய கார்.. முதல்வர் விஜய் கொடுக்கும் மெகா பரிசு!
CM Vijay Provide Cars To MLAs : தமிழகத்தில் முதல் முறை எம். எல். ஏ. ஆனவர்களுக்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கார் மற்றும் உதவியாளர்கள் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஜோதிமணி பேசுகையில், என்னை போன்ற எம்எல்ஏக்கள் பலரும் பொருளாதார வசதி இல்லாததால் தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்வதற்கு எங்களிடம் கார் வசதி இல்லை. என்னை போன்ற பல்வேறு சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலையும் இவ்வாறாகவே உள்ளது. எனவே, அரசு இதனை கவனத்தில் கொண்டு எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார். அப்போது, பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர், இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்று பேரவையில் தெரிவித்தார். அதன்படி, தற்போது முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கார்- உதவியாளர்கள்
இது தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறுகையில், தமிழகத்தில் முதல் முறை எம். எல். ஏ. மாணவர்களுக்கு கார்கள் வழங்க முதல் அமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளார். ஒரு தொகுதி அலுவலகத்துக்கு ஒரு கார் என்கிற அடிப்படையில் கார்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை, எம்எல்ஏக்கள் பயன்படுத்தலாம். இதே போல, முதல் முறை எம்எல்ஏக்களுக்கு உதவியாளர்கள் நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் பள்ளி மாணவர் கொடூரக் கொலை.. “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!!




தொகுதி முழுவதும் பயணிக்க கார் தேவை
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, வி. சி. க. எம். எல். ஏ. ஜோதிமணி பேசுகையில், நான் சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சட்டமன்றத்துக்கு வருகை தருகிறேன். இதற்காக பேருந்து அல்லது ரயிலில் வருவதற்கு அலவென்ஸ் கொடுக்கப்படுகிறது. சட்டமன்றத்தின் தனி வண்டியில் வருவதற்கு என்னிடம் சொந்தமாக வாகன வசதி இல்லை. இதனால், வாடகை காரிலேயே சட்டமன்றத்துக்கு வந்து செல்கிறேன். இது மட்டும் இன்றி என்னுடைய தொகுதி சுமார் 40 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. மக்களின் பிரச்சினை தொடர்பாக தொகுதி முழுவதும் பயணித்து, குறைகளை கேட்பதற்கு வாகன வசதி இல்லாத நிலை உள்ளது.
அவசியம் தேவைப்படும் உதவியாளர்கள்
அத்துடன், ஒரு உதவியாளர் வைத்துக்கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கும் என்னிடம் வசதி இல்லை. தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான எம்எல்ஏக்களின் நிலை இவ்வாறாகவே உள்ளது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட மற்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தற்போது, அந்த கோரிக்கை மீது முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க: சென்னை பெரம்பூரில் அதிர்ச்சி.. ATM பண வாகனத்தில் பெட்டி மாயம்.. பணத்துடன் தப்பிய கும்பலுக்கு போலீசார் வலை!!