AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய் எத்தனை நாளுக்கு வாய் மூடி மெளனியாக இருக்கப்போகிறார்.. கனிமொழி எம்.பி. காட்டமான கேள்வி!

Kanimozhi Criticizes CM Vijay : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்னும் எத்தனை நாள்களுக்கு வாய் மூடி மெளனியாக இருக்கப் போகிறார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், எம். பி. யுமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் விஜய் எத்தனை நாளுக்கு வாய் மூடி மெளனியாக இருக்கப்போகிறார்.. கனிமொழி எம்.பி. காட்டமான கேள்வி!
முதல்வர் மீது கன்மொழி விமர்சனம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Aug 2026 21:57 PM IST

தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் எத்தனை நாள்களுக்கு வாய் மூடி மெளனமாக இருக்கப்போகிறார் என்று திமுக துணை பொதுச் செயலாளரும், எம். பி. யுமான கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரம் கடந்துள்ளது. தமிழகத்தை பொருளாதார இறையாண்மை கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை தவெக அரசு மறந்து விட்டதா. இதன் காரணமாகவே, தமிழக அரசு அமைதி காத்து வருகிறதா. சட்ட திருத்தம் மாநிலத்தின் நிதி சுமையை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள நிலத்தின் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முயல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது ஆகும்.

எத்தனை நாளுக்கு முதல்வர் மெளனமாக இருப்பார்

இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் தற்போது வரை எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இன்னும் எத்தனை நாட்களுக்கு முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் அமைதி காக்க போகிறார். நாட்டில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரத்தை செலுத்த முயற்சிப்பதை தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் எப்போது எதிர்த்து பேசுவார். என்று அந்த பதிவில் கனிமொழி எம். பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க: கோவை மாநகராட்சியில் 54 அரசு ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்.. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சுரங்கங்கள்- கனிமங்கள் சட்ட திருத்த மசோதா

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அந்த வகையில், தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ( மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) தொடர்பான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த மசோதா கடந்த ஆகஸ்ட் 10- ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கனிமங்கள் சட்ட திருத்தத்தின் பின்னணி

இது தொடர்பாக தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் மத்திய அரசுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதை கனிமொழி எம். பி. குறிப்பிட்டு மேற்கண்ட விமர்சனங்களையும், கேள்விகளையும் முன் வைத்துள்ளார். சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத்தின் கீழ் கனிம உரிமைகள் மற்றும் கனிமவள நிலங்கள் மீது மாநில அரசுகள் தன்னிச்சையாக கூடுதல் வரி விதிப்பதை இந்த சட்டம் கட்டுப்படுத்தும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு நேற்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? ரயில்வேயின் தீபாவளி கிஃப்ட்.. முழு விவரம்!

Follow Us