AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர்நாடகாவில் துப்பாக்கி சூட்டில் 3 தமிழர்கள் பலி.. வன அலுவலகம் சூறை… போலீஸ் குவிப்பு.. பெரும் பரபரப்பு!

3 Tamils ​​Shot Dead In Karnataka : கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் 3 பேர் மீது வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், மூவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் குண்டு காயத்துடன் தப்பி ஓடினார் .

கர்நாடகாவில் துப்பாக்கி சூட்டில் 3 தமிழர்கள் பலி.. வன அலுவலகம் சூறை… போலீஸ் குவிப்பு.. பெரும் பரபரப்பு!
கர்நாடகாவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மூவர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 15 Aug 2026 16:36 PM IST

கர்நாடக மாநிலம், ஹனூர் வட்டம், மாரியமங்கலம் வனப்பகுதியில் மர்ம கும்பல் ஒன்று நுழைந்து இருப்பதாக இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 15- ஆம் தேதி) ஹனூர் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த மர்ம கும்பலை வனத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களிடம் இருந்து அந்த கும்பல் தப்பி ஓட முயற்சித்தது. இதனால், அந்த கும்பலுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில், வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மற்றும் வனத்துறை ஊழியர் சிவராஜ் ஆகியோருக்கு குண்டு காயம் ஏற்பட்டது.

வனத்துறை துப்பாக்கி சூட்டில் 3 தமிழர்கள் பலி

இந்த சம்பவம் தொடர்பாக ஹனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் வட்டத்தில் உள்ள மரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி, ஜெகன்னாத தொட்டியை சேர்ந்த ஜான் ரோஸ் பீட்டர், லாசர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. இவர்கள், மூன்று பேரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள், மாரியமங்கலம் வனப்பகுதிக்குள் மான்களை வேட்டையாடுவதற்காக துப்பாக்கிகளுடன் சென்றது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க: முதல் முறை எம்எல்ஏக்களுக்கு புதிய கார்.. முதல்வர் விஜய் கொடுக்கும் மெகா பரிசு!

காவேரி வனவிலங்கு சரணாலய அலுவலகம் சூறை

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, கிராம மக்கள் கூறுகையில், வனத்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மூன்று பேரும் வேட்டைக்காரர்கள் கிடையாது. அவர்கள் வனத்துறை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இருப்பினும், அவர்களை பழிவாங்கும் வகையிலேயே வனத்துறை அதிகாரிகள் கொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். இதனிடையே, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஹனூரில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தை சூறையாடினர்.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு – பெரும் பரபரப்பு

இதனால், அந்த பகுதியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்றொரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார். இந்த கும்பலை சேர்ந்த மகிமதாஸ் என்பவர் தப்பி ஓடிய நிலையில் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: மகளுக்கு தொடர் காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தை கொடூர கொலை.. விருதுநகரில் பதற்றம்!

Follow Us