போலீசார் ஹெல்மெட் போடவில்லையா? இனி பைக் சீஸ்… காவல்துறை அதிரடி உத்தரவு!
Police Personnel Wear Helmets : தமிழ கத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவு ம், அவர்களது பைக் பறிமுதல் செய்யப்படும் எனவும் மண்டல காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது .
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், சில இடங்களில் பொதுமக்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வது போல, சட்டத்தை காக்கும் போலீசாரில் சிலர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனை சில பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நிலையில், தமிழக போலீசார் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்றால், அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
இது தொடர்பாக மண்டல காவல்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: போலீசார் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது தெரிய வந்தால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபர், ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய புதிய தலைக்கவசத்தை வாங்கினால் மட்டுமே அவரது வாகனம் திரும்ப ஒப்படைக்கப்படும். போலீசார் வழக்கம் போல காலை பணிக்கு வரும்போது, தலைக்கவசம் அணிந்து வருவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: சுடுகாட்டில் கொடூரம்.. கும்மிடிப்பூண்டியில் சிறுவன் கொடூர கொலை.. கல்லறை மீது சடலம் வீச்சு!




மீறும் போலீசாருக்கு ஒரு நாள் ஆப்சென்ட் . . .
இதை மீறி போலீசார் தலைக்கவசம் அணியாமல் பணிக்கு வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஒரு நாள் ஆப்சென்ட் போடப்பட வேண்டும். மேலும், சாலையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்லும் போலீசாருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், சிக்கி உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
உயிருக்கு அரணாக விளங்கும் ஹெல்மெட்
விபத்துக்களை தடுப்பதற்காகவும், உயிர் இழப்புகளை குறைப்பதற்காகவும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், அதனை மீறி சில பொதுமக்கள் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினாலும், தலைக்கு பெரிதளவில் பாதிப்பு ஏற்படாமலும், உயிரிழப்பை தடுக்கும் வகையிலும் தலைக்கவசம் பெரிதும் அரணாக இருக்கும்.
சட்டத்தை மீறும் போலீசார்
இது ஒருபுறம் இருந்தாலும், சட்டத்தை காக்கக்கூடிய போலீசாரே தலைக்கவசம் அணியாமல் சீருடையில் பணிக்கு செல்வதும், இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதுமாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கும், கடிவாளம் இடும் வகையில் காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : அனந்தபுரி ரயிலில் ரூ. 3 கோடி வைர நகை கொள்ளை.. துப்பறிந்து தூக்கிய தனிப்படை… சினிமா பாணியில் சிக்கிய கில்லாடிகள்!