உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
Heavy Rain Alert : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 16, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 21, 2026 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 16 : வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 16, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 21, 2026 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் படி ஆகஸ்ட் 17, 2026 நாளை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிககளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 16, 2026 முதல் ஆகஸ்ட் 21, 2026 வரை பரவலாக மழைக்கு வாய்ய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!




கனமழை எச்சரிக்கை
அந்த வகையில் ஆகஸ்ட் 17, 2026 நாளை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18, 2026 செவ்வாய் கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 19, 2026 நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக ஆகஸ்ட் 16, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 21, 2026 வரை 6 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 16, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : பயணிகள் கவனத்திற்கு… தமிழ்நாட்டின் முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16, 2026 இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.