தமிழக காங்கிரஸில் 77 மாவட்ட பார்வையாளர்கள் நியமனம்… பீட்டர் அல்போன்ஸ் தகவல்!
TN Congress District Observers Appointed : தமிழக காங்கிரஸ் கட்சியில் கட்சி ரீதியாக 77 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிக்கையை கட்சியின் மாநில இயக்க சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸில் 77 கட்சி மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, மாநில இயக்க சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி ஒப்புதலோடு 77 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், வடசென்னை மேற்கு- என்.கே. பகவதி, வடசென்னை கிழக்கு- வி. எம். சி. மனோகரன், மத்திய சென்னை மேற்கு- ஏ. ரங்கசாமி, மத்திய சென்னை கிழக்கு- ஈ.பி. ரவி, தென் சென்னை மேற்கு- வீ. கார்த்திகேயன், தென் சென்னை கிழக்கு ஆர். கிருஷ்ணன், தென் சென்னை மத்தியம்- சங்கர பாண்டியன், திருவள்ளூர் தெற்கு- முருகேசன், திருவள்ளூர் வடக்கு- சரவணன், ஆவடி- அமிர்த ராஜா, செங்கல்பட்டு தெற்கு- மக்கள் ஜி. ராஜன், செங்கல்பட்டு வடக்கு- தென்னரசு.
காஞ்சிபுரம் முதல் வேலூர் மாநகரம் வரை
இதேபோல, காஞ்சிபுரம்- சித்திக், விழுப்புரம் மத்தியம்- ஜெயக்குமார், விழுப்புரம் வடக்கு- மோகன் குமாரராஜா, கள்ளக்குறிச்சி- ரவிச்சந்திரன், கடலூர் மேற்கு காஞ்ஜி ஜி.வி. மதியழகன், கடலூர் மத்தியம்- ரங்கபாஷ்யம், கடலூர் தெற்கு – உதயம், திருவண்ணாமலை தெற்கு- துரை வேலன், திருவண்ணாமலை வடக்கு- சுப்பிரமணியன், ராணிப்பேட்டை அம்மாபேட்டை- பாண்டியன், திருப்பத்தூர்- ராஜரத்தினம், வேலூர் மத்தியம்- சித்திக், வேலூர் மாநகர்- பாஸ்கர்.
மேலும் படிக்க: ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை… எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம்!




கிருஷ்ணகிரி முதல் திருப்பூர் வரை
கிருஷ்ணகிரி மேற்கு- சுந்தரமூர்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு- சீனிவாச குமார், சேலம் மேற்கு- சத்யமூர்த்தி, சேலம் மாநகர்- சிவ. ராஜ சேகரன், சேலம் கிழக்கு- திலகர், தருமபுரி- ரஞ்சன் குமார், நாமக்கல் மேற்கு- செந்தில்நாதன், நாமக்கல் கிழக்கு முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ஈரோடு தெற்கு- ரமேஷ், ஈரோடு வடக்கு மகீந்திரன், ஈரோடு மாநகர்- தமிழ்செல்வன், திருப்பூர் தெற்கு- சங்கர், திருப்பூர் வடக்கு- ஜெய் கணேஷ், திருப்பூர் மாநகர்- துரைராஜ்.
கோயம்புத்தூர் முதல் மயிலாடுதுறை வரை
கோயம்புத்தூர் வடக்கு- லோகநாதன், கோயம்புத்தூர் மாநகர்- முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், கோயம்புத்தூர் தெற்கு- கூடலூர் எம்பி முருகேசன், நீலகிரி- அசோகன் சாலமன், திண்டுக்கல் மேற்கு- சுரேஷ், திண்டுக்கல் மாநகர்- தளவாய் பாண்டியன், திண்டுக்கல் கிழக்கு- சிறுவை ராமமூர்த்தி, திருச்சி தெற்கு- சிவசுப்பிரமணியன், திருச்சி வடக்கு- பாஸ்கரன், திருச்சி மாநகர்- திரவியம், கரூர்- முகமது குலாம் மொய்தீன், பெரம்பலூர்- நவீன் குமார், மயிலாடுதுறை- பினுலால் சிங்.
அரியலூர் முதல் தேனி வரை
அரியலூர்- பிரசாத், திருவாரூர்- தெய்வேந்திரன், நாகப்பட்டினம்- முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராம், தஞ்சாவூர் தெற்கு- சுப்பிரமணியன், தஞ்சாவூர் வடக்கு- வீரபாண்டியன், தஞ்சாவூர் மாநகர்- அண்ணாமலை, புதுக்கோட்டை தெற்கு- தனபால், புதுக்கோட்டை வடக்கு- இளையராஜா, மதுரை தெற்கு- ஜெயபிரகாஷ், மதுரை மாநகர்- தமிழ்செல்வன், மதுரை வடக்கு- ராஜேந்திரன், சிவகங்கை- முன்னாள் எம்எல்ஏ துரை சந்திரசேகர், தேனி- விஜயசுந்தரம்.
விருதுநகர் முதல் நாகர்கோவில் வரை
விருதுநகர் மேற்கு- செல்வகுமார், விருதுநகர் கிழக்கு- மன்னை மதியழகன், ராமநாதபுரம்- ராஜேந்திரன், தூத்துக்குடி தெற்கு- முத்தழகன், தூத்துக்குடி மாநகர்- பஞ்சாட்சரம், தூத்துக்குடி வடக்கு- பூவை ஜேம்ஸ், திருநெல்வேலி கிழக்கு- டீக்காராமன், திருநெல்வேலி மாநகர்- கலைச்செல்வன், தென்காசி- பிரபு, கன்னியாகுமரி மேற்கு- வசந்தராஜ், கன்னியாகுமரி கிழக்கு- அர்த்தனாரி, நாகர்கோவில் மாநகர்- திருச்செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: 80- ஆவது சுதந்திர தின விழா.. முதல்வர் விஜய்யிடம் விருது பெற்றவர்கள் விவரம்!