AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கு.. 6 பேரை தட்டி தூக்கிய தனிப்படை.. சிலருக்கு வலைவீச்சு!

Chennai School Student Murder 6 Arrested : சென்னை மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு மாணவர் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக 6 பேரை திருவொற்றியூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .

சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கு.. 6 பேரை தட்டி தூக்கிய தனிப்படை.. சிலருக்கு வலைவீச்சு!
சென்னையில் கொலையுண்ட மாணவர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 15 Aug 2026 18:45 PM IST

சென்னை மாவட்டம், திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தனுஷ் ( 16 வயது). இவர், வெண்கோ நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவர் பயின்று வரும் பள்ளியின் அருகே உள்ள அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் தனுஷ் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் தனுஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மாணவர் கொலையில் 6 பேர் கைது

இதில், தலைமறைவாக இருந்து வந்த 11- ஆம் வகுப்பு மாணவர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், 6 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும், அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: சீருடையில் மது அருந்திய பள்ளி மாணவிகள்.. தலைமை ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை.. கன்னியாகுமரியில் பரபரப்பு!

பள்ளி மாணவர் கொலை சம்பவத்தின் பின்னணி

இந்த கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி ஆணையர் பால்ராஜ், காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும், 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் யார் சீனியர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

2- ஆவது நாளாக மாணவர் உடலை பெற மறுத்த பெற்றோர்

இதனால், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உட்பட 10- க்கும் மேற்பட்டோர் மாணவர் தனுசை அழைத்து சென்று தாக்கியதாக தெரிகிறது. இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவர் தனுஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மாணவர் தனுஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலத்தை பெறுவதற்கு 2- ஆவது நாளாக அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காமூகனை அரிவாளால் வெட்டி காவல் நிலையத்துக்கு இழுத்து சென்ற வீர பாட்டி.. கரூரில் பெரும் பரபரப்பு!

Follow Us