லேப்டாப்பை சார்ஜ் போட்டு தூங்கிய மாணவன் – சார்ஜரில் கைப்பட்டு மின்சாரம் தாக்கி பலி
Laptop Charging Tragedy : திருவள்ளூரில் பிளஸ் 1 படிக்கும் 15 வயது மாணவர் சீனிவாசன் லேப்டாப்க்கு சார்ஜ் போட்டு அதன் அருகிலேயே தூங்கியிருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சார்ஜர் வயரில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர், ஆகஸ்ட் 15 : எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும்போது மின் கசிவு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இந்த வகையில், திருவள்ளூரில் பிளஸ் 1 மாணவன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, லேப்டாப் சார்ஜர் போட்டிருந்ததை கவனிக்காமல் தெரியாமல் கைப்பட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மணவாள நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேப்டாப் சார்ஜரில் கைப்பட்டு மின்சாரம் தாக்கி மாணவன் பலி
திருவள்ளூரில் பிளஸ் 1 படிக்கும் 15 வயது மாணவர் சீனிவாசன் லேப்டாப்க்கு சார்ஜ் போட்டு அதன் அருகிலேயே தூங்கியிருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சார்ஜர் வயரில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். தற்போது மாணவரின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : கர்நாடகாவில் துப்பாக்கி சூட்டில் 3 தமிழர்கள் பலி.. வன அலுவலகம் சூறை… போலீஸ் குவிப்பு.. பெரும் பரபரப்பு!




இதே போல கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னையில் லேப்டாப்பிற்கு சார்ஜ் செய்ய முயன்ற பெண் மருத்துவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரணிகா என்ற பெண் மருத்துவர் எம்பிபிஎஸ் படித்து முடித்து விட்டு, மன நல மருத்துவம் சார்பாக எம்.டி படித்து வந்தார். இவரது மருத்துவரும் கணவர் எனவும் இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பயற்சிக்காக சென்னை வந்த அவர் பெண்கள் விடுதியில் தங்கியிருந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது கணவரது செல்போன் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது கணவர் விடுதியை தொடர்புகொண்டு கேட்டுள்ளார். இதனையடுத்து விடுதி நிர்வாகத்தினர் சென்று பார்த்தபோது அவர் அறையில் மயங்கிய நிலையில் இருந்திருக்கிறார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
இதையும் படிக்க : ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை… எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம்!
மருத்துவர் சரணிகா இறந்த நிலையில் கிடந்தபோது அவரது கையில் லேப்டாப் வயர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஒரே எக்ஸ்டென்ஷன் பாக்ஸில் ஏர் கூலர், செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் லேப்டாப் கேபிள் சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும், மின்சார இணைப்பில் இருந்த எக்ஸ்டென்ஷன் பாக்ஸில் லேப்டாப் வயரை இணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்பட்டது. அவரது வலது கையில் தீக்காயமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் மக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது.