AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பயணிகள் கவனத்திற்கு… தமிழ்நாட்டின் முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

TN Train Service Changes : பாமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் சில ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாகவும் சில ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு வராது எனவும் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிடலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு… தமிழ்நாட்டின் முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Aug 2026 22:02 PM IST

சென்னை, ஆகஸ்ட் 15 : மாலூர் ரயில் நிலையத்தில் எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் வசதியை ஏற்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளதாகவும், சில ரயில்களின் பகுதியளவில் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெர்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த பட்டியலில் வட மாவட்டங்களில் ரயில் சேவைகள் அதிக அளவில் பாதிக்கப்படவுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பகுதியளவில் ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்கள்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 18, 2026 அன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட வேண்டிய ரயில் எண் 16519 கொண்ட ரயில் பங்காரப்பேட்டையுடனேயே தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். இந்த ரயில் பெங்களூரு வரை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 80- ஆவது சுதந்திர தின விழா.. முதல்வர் விஜய்யிடம் விருது பெற்றவர்கள் விவரம்!

ரயில் புறப்படும் இடத்தில் மாற்றம்

கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து ஆகஸ்ட் 18, 2026 அன்று காலை 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 66550 கொண்ட ரயில் கே.எஸ்.ஆர். பெங்களூரு – ஜோலார்பேட்டை மெமு ரெயில், கே.எஸ்.ஆர். பெங்களூரு மற்றும் பங்காரப்பேட்டை இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரியில் பெங்களூருவுக்கு பதிலாக பங்காரப்பேட்டையிலிருந்து அதன் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரமான காலை 10.05 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கும்.

வழி மாற்றம் செய்யப்படும் ரயில்

  • தேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆகஸ்ட் 17, 2026 அன்று மாலை 5 மணிக்கு புறப்படும் எண். 07314 கொண்ட ரயில் கொல்லம் ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், சேலம், ஒமலூர், தர்மபுரி, ஒசூர், பையப்பனஹள்ளி கேபின், யஷ்வந்த்பூர் ஏ கேபின் மற்றும் துமகுரு ஸ்கிப்பிங் ஸ்டாப், கிருஷ்ணாராஜாபுரம். கிருஷ்ணாராஜபுரம் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே போல கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 17, 2026 அன்று இரவு 8 மணிக்குமணிக்குபுறப்பட வேண்டிய ரெயில் எண் 16566 மங்களூரு சென்ட்ரல் யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், குப்பம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நிற்காமல், சேலம், ஒமலூர், ஒசூர், பெலந்தூர் ரோடு மற்றும் பனஸ்வாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : போலீசார் ஹெல்மெட் போடவில்லையா? இனி பைக் சீஸ்… காவல்துறை அதிரடி உத்தரவு!

  • டானாபூரில் இருந்து ஆகஸ்ட் 16, 2026 அன்று மதியம் 3 மணிக்கு புறப்படும் ரயில் எண். 03251 கொண்ட ரயில் டானாபூர் எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயில் விஜயவாடா, குண்டூர். தோன். தர்மாவரம். யெலஹங்கா மற்றும் எஸ்எம்விடி பெங்களூரு வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஒங்கோல், கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காரப்பேட்டை மற்றும் ஒயிட்பீல்டு ஆகிய இடங்களுக்கு வராது.
  • பெங்களூரு – லக்னோ இடையே ரயில் எண். 05073 கொண்ட சிறப்பு ரயில் ஆகஸ்ட் 18, 2026 அன்று கேஎஸ்ஆர் பெங்களூரில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் SMVT பெங்களூரு. பெங்களூரு கண்டோன்மென்ட், யெலஹங்கா, தர்மாவரம், தோன். குண்டூர் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் நின்று செல்லும். அதே போல கிருஷ்ணராஜபுரம். பங்காரப்பேட்டை குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்களுக்கு வராது.
  • பெங்களூருவில் இருந்து கிளம்பும் பெங்களூரு டானாபூர் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 18, 2026 அன்று 23.50 மணிக்குப் புறப்பட்டு எஸ்எம்விடி பெங்களூரு, யெலஹங்கா, தர்மாவரம், தோன். குண்டூர் மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும். ஒயிட்பீல்டு, பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர். கூடூர் மற்றும் ஓங்கோல் ஆகிய இடங்களில் நிறுத்தங்களில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us