குடும்பங்கள் கொண்டாடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Vishwanath and Sons Day 2 Collections: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் தி ஒன் என கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் 46வது திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமானது வெளியாகி 2வது நாளை கடந்துள்ள நிலையில், உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தி ஒன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருபவர்தான் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பினால் 46வது படமாக வெளியான படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishweanath And sons). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்க, சித்தாரா என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருந்தார். மேலும் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar), ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியான நிலையில், இன்றுடன் (16/08/2026) 2 நாட்களை கடந்துள்ளது. இப்படம் இன்றுவரை உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியானது பதில் சொல் பொயட்ரி வீடியோ
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2வது நாள் வசூல் விவரங்கள்:
நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில், ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீரனாகவும், ஒரு தொழிலதிபராகவும் நடித்துள்ளார். 40 வயதை கடந்த அவரின் மனதை பார்த்து, 20 வயது மமிதாவிற்கு எவ்வாறு காதல் மலர்கிறது என்பதே கதையாகும். இதற்கிடையே நடக்கும்,பிரச்சனைகள், காமெடி என இப்படமானது குடும்பங்கள் கொண்டாடும் ஒரு பிரம்மாண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் 22வது வருடம்.. ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட விஷால்!
இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 2 நாட்களை கடந்த நிலையில், எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. இந்த படமானது 2வது நாள் முடிவில் உலகமெங்கும் சுமார் ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2வது நாள் வசூல் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:
#VishwanathAndSons hits it out of the park and smashes a 100cr+ in just 2 days 💥💥#BlockbusterVAS running successfully in cinemas near you ❤️#BlockbusterVishwanathAndSons @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NavinNooli… pic.twitter.com/fhIpLYvFJb
— Sithara Entertainments (@SitharaEnts) August 16, 2026
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. வார இறுதியாக வெளியான இந்த படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. விரைவில் இப்படம் ரூ 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு படத்திற்கு பின் சூர்யாவுக்கு வெற்றி படமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.