80வது சுதந்திர தின விழா.. கார்த்தியின் சர்தார் 2 படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!
Sardar 2 Special Poster: முன்னணி நடிகர்களின் வரிசையில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புது திரைப்படம் சர்தார் 2. இன்று (15/08/2026) 80வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் நிலையில், அதை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் கார்த்தி (Karthi) 2வது முறை இணைந்துள்ள திரைப்படம்தான் சர்தார் 2 (Sardar 2). இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 (Sardar 1) படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்தி, மகன் மற்றும் தந்தை என 2 வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் தண்ணீரினால் நடக்கும் போர் குறித்த ஒரு வித்தியாசமான இன்டர்நெஷனல் டெர்ரரிஸ் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அவருடன் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah), மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் ராஜீஷா விஜயன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து ஒரு பாடல் கூட வெளியாகவில்லை.
இந்த படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாக காத்திருக்கிறது. இன்று, (15/08/2026) இந்தியாவில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கும் நிலையில், அதை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கிராமத்தில் மாணவர்கள், விவசாயிகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்..!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சர்தார் 2 படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் பதிவு:
#Sardar Always on Duty 🫡
Happy Independence Day to all of us 🇮🇳@Karthi_Offl @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69@lakku76 @venkatavmedia @ivyofficial2023@RajaS_official @B4UMotionPics @THEOFFICIALB4U pic.twitter.com/JCnMtxX1r9
— Prince Pictures (@Prince_Pictures) August 15, 2026
கார்த்தியின் சர்தார் 2 சென்சார் மற்றும் பாடல் ரிலீஸ் அப்டேட்:
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் கூட்டணியில் இந்த சர்தார் 2 படம் உருவாகியுள்ளது. இந்த படத்தய் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், நடிகை மாளவிகா மோகனன் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளாராம். இப்படம் ஒரு ஸ்பை கதையை மையமாக கொண்டு, சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிவி ஷோவில் தொகுப்பாளராக களமிறங்கிய சமந்தா.. எந்த நிகழ்ச்சி தெரியுமா?
அந்த வகையில் இப்படத்திற்கு யு/ஏ தர சென்சார் சான்றிதழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இப்படம் வரும் 2026ம் ஆனது செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சர்தார் 1 படத்தை போலவே சர்தார் 2 படமானது கார்த்திக்கு மாபெரும் வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.