AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செப்டம்பர் மாதம் ரிலீஸ் தேதியை லாக் செய்தது சர்தார் 2 படக்குழு – அப்டேட் இதோ

Sardar 2 Movie Release Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

செப்டம்பர் மாதம் ரிலீஸ் தேதியை லாக் செய்தது சர்தார் 2 படக்குழு – அப்டேட் இதோ
சர்தார் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jun 2026 13:00 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. ஆக்‌ஷன் காமெடி ஜானரில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து சர்தார் 2, மார்ஷல் மற்றும் கார்த்தி 30 ஆகியப் படங்கள் உருவாகி வருகின்றது. இதில் முதலாவதாக தமிழ் சினிமாவில் தற்போது சர்தார் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாகிறது சர்தார் 2 படம்:

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த சர்தார் 2 படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்திரன் எழுதி இயக்கி உள்ளார். நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Samantha: 3 ஆண்டுக்கு பின் சமந்தாவின் மாஸ் கம்பேக்.. 4 நாட்களிலே ரூ 50 கோடி வசூலித்த எங்கள் தங்கம் திரைப்படம்!

சர்தார் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தலைவர் 173 படத்திற்காக அஸ்வத் மாரிமுத்துவிடம் கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்

Follow Us