Thalaivar173: சென்னையில் தொடங்கியது ரஜினிகாந்தின் தலைவர்173 பட ஷூட்டிங்?
Thalaivar 173 Shooting Update: சூப்பர் ஸ்டார் என்றாலே ஒருவர்தான், அந்த ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழில் தொடர்ந்து புது படங்களை நடித்துவருகிறார். இவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், தலைவர் 173 படத்தின் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், இதன் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளதாம்.
நடிகராக தமிழ் சினிமாவில் ரசிகர்களை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மகிழ்ச்சிப்படுத்திவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). இவர் நாயகனாக சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு தற்போதுவரையிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு (Thalapathy Vijay) அடுத்ததாக அதிகம் வசூல் செய்யும் படங்கள் என்றாலே அது ரஜினிகாந்தின் படங்களே. அந்த வகையில் இவர் தற்போது ஜெயிலர் 2 (Jailer 2) படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த நிலையில், தலைவர் 173 (Thalaivar 173) படத்திற்காக தயாராகிவருகிறார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் (Kamal Haasan)) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இயக்குநர்கள் இரு முறை அறிவிக்கப்பட்டு தற்போது அந்த இயக்குநர்கள் இப்படத்திலிருந்து விலகிவிட்டனர்.
தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இப்படத்தை இயக்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், இதன் ஷூட்டிங் தற்போது சென்னையில் தொடங்கியுள்ளதாம். தற்போது படத்தின் புரோமோக்கான ஷூட்டிங் நடைபெறுவதாகவும், விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.



இதையும் படிங்க: நடிகர் டூ முதல்வர்.. தொடரும் சாதனைகள்.. முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!
ரஜினிகாந்த் – அஸ்வத் மாரிமுத்துவின் தலைவர் 173 பட ஷூட்டிங் தொடக்கம்:
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் ரஜினிகாந்த் இன்னும் இணையவில்லையாம். முதலில் இப்படத்திற்கான பாடல் ஷூட்டிங்கை தொடங்குவதாக கூறப்படுகிறது. இதை டான்ஸ் மாஸ்டர் சாண்டி தொகுப்பதாக கூறப்படுகிறது. தற்போது இதன் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியிருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
#Thalaivar173 – Shooting 🎥 has started by #AshwathMarimuthu without #SuperstarRajinikanth portions. The #Rajinikanth portions are expected to begin with a song sequence choreographed by Sandy Master.
Meanwhile, #KamalHaasan has liked #CibiChakaravarthy’s story, despite… pic.twitter.com/lVSSL9ZgfZ
— Movies Singapore (@MoviesSingapore) June 21, 2026
இந்த படத்தில் ரஜினிகாந்த் இதுவரை நடித்திடாத டாக்டராக நடிப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என்பது குறித்து ன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. மேலும் இப்படத்தில் மலையாள நடிகர்கள் சிலர் நடிப்பதாவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த ரௌடி பேபி டான்ஸ்.. இணையத்தில் லீக்கானது ஓம் பட தனுஷ் – ஸ்ரீலீலா நடன போட்டோஸ்!
இதை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் நிலையில், அவர் இப்படத்தில் கேமியோ வேடத்தில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரோமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது வரும் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.