AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Shruti Haasan: KHxRK படத்தில் நான் நடிக்கிறேனா? நெல்சன் சார் என்ன பண்ணப்போறாருனு ஆர்வமாக இருக்கு – ஸ்ருதி ஹாசன் பேச்சு!

Shruti Haasans Excitement On KHxRK Movie: கமல்ஹாசனின் மகளும், தென்னிந்திய நடிகையாக சிறந்து விளங்குபவர் ஸ்ருதி ஹாசன். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அதில் KHxRK திரைப்படம் பற்றி மற்றும் அதில் அவர் நடிக்கிறார் என்பது குறித்து பேசியுள்ளார். அது பற்றி விவரமாக காணலாம்.

Shruti Haasan: KHxRK படத்தில் நான் நடிக்கிறேனா? நெல்சன் சார் என்ன பண்ணப்போறாருனு ஆர்வமாக இருக்கு – ஸ்ருதி ஹாசன் பேச்சு!
KHxRK படம் பற்றிஸ்ருதி ஹாசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jun 2026 13:36 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், ரஜினிகாந்த் (Rajinikanth) இதில் கதாநாயகனாக நடித்தது அசத்தியிருந்தார். இதில் ரஜினியின் மகளாக நடித்து வரவேற்பை பெற்றிருந்தார் ஸ்ருதி ஹாசன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். மேலும் விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தில் நடித்துள்ள நிலையில், இன்னும் அது வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதி ஹாசன் மேடையில் பேசியிருந்தார். அதில், அப்பா கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் KHxRK படம் பற்றி பேசினார். மேலும் அதில் அவர் நடிக்கிறாரா? என்பது குறித்து விளக்கம் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: அந்த உலகமும் கதையும் என்னைக் வெகுவாகக் கவர்ந்தன – சகுந்தலம் படம் குறித்து சமந்தா பேச்சு

KHxRK திரைப்படம் குறித்த ஆர்வம் பற்றி பேசிய ஸ்ருதி ஹாசன்:

அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய ஸ்ருதிஹாசனிடம், “நீங்கள் KHxRK படத்தில் நடிக்கிறீர்களா? “என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க தொடங்கிய ஸ்ருதி, “இல்லை இல்லை, நான் இந்த படத்தில் இல்ல. ஆனால எல்லோரையும் மாதிரி நானும் இப்படத்தின் மீது ஆர்வமாக இருக்கிறேன். நெல்சன் சார் என்ன பண்ண போகிறார் என, இப்படத்தின் மீட்டது நானும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். அப்பாவின் (கமல்ஹாசன்) ரசிகர்களுக்கு தெரியும், நான் கூலி படத்திற்கு பின் ரஜினிகாந்த் சாரின் பெரிய ரசிகையாகிவிட்டேன்.

இதையும் படிங்க: சேயோன் படத்திற்கு போட்டியாக ரிலீஸாகும் சூர்யா47? – தகவல்கள் இதோ!

ஏனென்றால் அவரின் குணாதியசங்கள் அப்படி, இவர்கள் இருவரையும் திரியில் ஒன்றாக பார்ப்பதற்கு நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம். அவர்கள் இருவரையுமே சமீபத்தில் நான் சந்தித்திருந்தேன். இருவருமே நலமாக இருகிறார்கள். KHxRK படத்தின் மீது ஆர்வமாக இருக்கு, இருவருமே இப்படத்தில் இணைந்து நடிப்பது இந்த சினிமா துறைக்கே ஒரு பெருமை என கூறலாம்” என அதில் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

KHxRK திரைப்படத்தை பற்றி ஸ்ருதி ஹாசன் பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ:

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் வெளியான ராம் சரணின் பெத்தி படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தார். ஹல்லலாலோ என்ற பாடலில் ராம் சரண், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜான்வி கபூர் என மூவரும் இணைந்து நடனமாடியிருந்தனர். இதையடுத்து ஸ்ருதிஹாசன் தற்போது புதிய படங்களின் மீது தனது கவனத்தை செலுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us