அந்த உலகமும் கதையும் என்னைக் வெகுவாகக் கவர்ந்தன – சகுந்தலம் படம் குறித்து சமந்தா பேச்சு
Samantha Ruth Prabhu talks about Shaakuntalam movie | தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சகுந்தலம் படம் குறித்தும் அதில் நடித்த அனுபவம் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது அதிரடி ஆக்ஷன் நாயகியாக மாறியுள்ளார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து தெலுங்கு மொழிகளிலேயே படங்களை தயாரித்து வருகிறார் தொடர்ந்து. இந்த நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு தயாரித்து கதையின் நாயகியாக நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் மா இண்டி பங்காரம். இந்தப் படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் நாயகியாக நடித்து உள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தா முன்னதாக அவரது நடிப்பில் வெளியான சகுந்தலம் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சகுந்தலம். இயக்குநர் குணசேகர் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர்கள் சமந்தா மற்றும் தேவ் மோகன் இருவரும் நாயகன் மற்றும் நாயகியாக நடித்து இருந்தனர். மித்தாலஜி ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து நடிகை சமந்தா சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அந்த உலகமும் கதையும் என்னைக் வெகுவாகக் கவர்ந்தன:
அந்தப் பேட்டியில் நடிகை சமந்தா ரூத் பிரபு கூறியதாவது, ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் உலகமும் அதன் கதையும் என்னைக் வெகுவாகக் கவர்ந்தன. அது பிரம்மாண்டமானதாக இருந்தாலும், தற்காலத்திற்கும் பொருத்தமானதாக அதாவது இக்காலத்திலும் நடக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. அந்த உலகத்தை நான் முழுமையாக நம்பினேன். ஆனால், சில சமயங்களில் அத்தகைய உணர்வு திரையில் சரியாகப் பிரதிபலிக்காமல் போய்விடுகிறது என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகன்.. ஜோடியாகும் கிரித்தி ஷெட்டி!
இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் பேச்சு:
#Shakunthalam – I was enamoured by the world and the story. It was larger than life, yet relevant; it could happen even in the present day. I believed in that world. Sometimes, it does not translate onto the screen.
– #Samantha pic.twitter.com/GmOFWIwttH— Movies Singapore (@MoviesSingapore) June 18, 2026