AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ராம் சரணின் பெத்தி படம் – உலக அளவில் 400 கோடிகளை கடந்து சாதனை

Peddi Movie Crossed 400 Crores Worldwide | தென்னிந்திய சினிமாவில் தற்போது ஒரு பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது நடிகர் ராம் சரணின் நடிப்பில் வெளியான பெத்தி படம். இந்தப் படம் தற்போது வரை உலக அளவில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ராம் சரணின் பெத்தி படம் – உலக அளவில் 400 கோடிகளை கடந்து சாதனை
பெத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2026 17:36 PM IST

தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் படங்கள் அந்த மொழிகளில் மட்டும் இல்லாமல் மற்ற தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே இந்த வரவேற்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பலப் படங்கள் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இதில் பல முன்னணி நடிகர்களின் படங்களும் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இதுவரை இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தென்னிந்திய மொழிகளில் வெளியான படங்களில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது நடிகர் ராம் சரணின் நடிப்பில் வெளியான பெத்தி.

நடிகர் ராம் சரண் நடிப்பில் கடந்த 04-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பெத்தி. ஸ்போர்ட்ஸ் ரூரல் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் புஜ்ஜி பாபு சனா எழுதி இயக்கி இருந்தார். இது தெலுங்கு சினிமாவில் இவரது இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ராம் சரணின் பெத்தி படம்:

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்த அளவிற்கு முன்பு வெளியான படங்கள் வசூலிக்கவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இதுவரை சுமார் ரூபாய் 400 கோடிகளை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சிவராஜ் குமாரின் அட்ராசிட்டி.. நகைச்சுவை ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து அபிஷன் ஜீவிந்த்தின் புது படக்குழு!

பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… முடிவுக்கு வந்ததா ஜன நாயகன் சென்சார் பிரச்சனை? டெல்லியில் படக்குழு

Follow Us