பாலிவுட்டில் டூ மோலிவுட்… பிரித்விராஜ் – மஞ்சு வாரியர் படத்தை தயாரிக்கும் கரண் ஜோஹர்
Karan Johar is producing the film starring Prithviraj and Manju Warrier | மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் ஒடியன் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளார்.
பாலிவுட் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். தொடர்ந்து தனது படங்களின் மூலம் மக்களிடையே வைரலாவது மட்டும் இன்றி தொடர்ந்து பேட்டிகளில் சர்ச்சைக்குரிய வகையில் ஏதேனும் கருத்துகளை தெரிவிப்பதனாலும் தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் தர்மா புரடெக்ஷன் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கரண் ஜோஹர் தொடர்ந்து பலப் படங்களை தயாரித்து உள்ளார். தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலரது படங்களை இயக்கவும் தயாரிக்கவும் செய்துள்ளார் கரண் ஜோஹர். தொடர்ந்து வெள்ளித்திரையில் பிரபலமாக இருக்கும் இவர் சின்னத்திரையில் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்களை அழைத்து பேட்டி எடுப்பது வழக்கம்.
அப்படி நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலான நட்சத்திரங்கள் கரண் ஜோஹரை லைவ் நிகழ்ச்சியிலேயே முகத்திற்கு நேராக கிண்டலடித்து கேலி செய்வது தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாலிவுட்டில் பிசியான தயாரிப்பாளராக வலம் வந்த கரண் ஜோஹர் தற்போது மலையாள சினிமாவில் தனது தர்மா புரடெக்ஷன் சார்பாக காலடி பதித்து உள்ளார்.




பிரித்விராஜ் – மஞ்சு வாரியர் படத்தை தயாரிக்கும் கரண் ஜோஹர்:
அதன்படி கரண் ஜோஹரின் மலையாள அறிமுகம் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. கரண் ஜோஹர் தனது தர்மா புரடெக்ஷன் சார்பாக ஒடியன் தி ஏஜ் ஆஃப் இல்யூஷன் என்ற படத்தை தயாரிப்பதன் மூலம் மலையாள சினிமாவில் கால் பதிக்கின்றது. இந்தப் படத்தை இயக்குநர் ராகுல் சதாசிவம் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகின்றது.
Also Read… Mysskin: விஜய் ஆண்டனி – ஸ்வாசிகா வைத்து ஒரு படம்.. வாய்ப்பு கொடுங்க – மிஷ்கின் பேச்சு!
ஒடியன் தி ஏஜ் ஆஃப் இல்யூஷன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A battle between truth and illusion unfurls soon.
Presenting Odiyan – The Age Of Illusion.Written & Directed by Rahul Sadasivan
Starring Manju Warrier & Prithviraj Sukumaran
Produced by Karan Johar, Adar Poonawalla, Apoorva Mehta & Supriya Menon pic.twitter.com/DqRDcqwIeQ— Dharma Productions (@DharmaMovies) June 16, 2026
Also Read… நான் அந்தப் படத்திலிருந்து சூர்யா சாரின் மிகப் பெரிய ரசிகன் – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்