AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவராஜ் குமாரின் அட்ராசிட்டி.. நகைச்சுவை ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து அபிஷன் ஜீவிந்த்தின் புது படக்குழு!

Shiva Rajkumar's Hilarious BTS: கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராகி இருந்துவருபவர் சிவராஜ்குமார். இவர் தமிழில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துவரும் புதிய படத்தில், அவரின் தந்தையாக நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படக்குழு, சிவராஜ் குமார் ஷூட்டிங் தளத்தில் செய்யும் அட்ராசிட்டி குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

சிவராஜ் குமாரின் அட்ராசிட்டி.. நகைச்சுவை ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து அபிஷன் ஜீவிந்த்தின் புது படக்குழு!
சிவா ராஜ்குமார் வைரல் வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Jun 2026 20:34 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகராக இருந்துவருபவர் சிவராஜ்குமார் (Shiva Rajkumar). இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) ஜெயிலர் (Jailer) படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதற்கு பின் தமிழில் சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் இறுதியாக தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர் (Capten Miller) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்துள்ளார். இப்படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ஜெயிலர் 1 படத்தில் நடித்திருந்த அதே நரசிம்மா வேடத்தில் இப்படத்திலும் நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்ததாக இவர் தமிழில் பபுதிதாக படம் ஒன்றிலும் நடித்துவருகிறார். இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) நாயகனாக நடித்துவரும் நிலையில், அவரின் தந்தையாக சிவராஜ்குமார் நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கியிருந்த நிலையில், தற்போது பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இப்படத்தின் ஷூட்டிங்கின்போது சிவராஜ்குமார் செய்த அட்ராசிட்டி மற்றும் நகைச்சுவையான தருணங்களை வீடியோவாக படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அஞ்சலியின் பிறந்தநாள்.. மகுடம் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!

சிவராஜ்குமார் குறித்த நகைச்சுவையுடன் கூடிய ஷூட்டிங் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு:

இந்த வீடியோவில் சிவராஜ்குமார், ஷூட்டிங் தளத்தில் டான்ஸ், பாட்டு மற்றும் நகைச்சுவை என மகிழ்ச்சியுடன் தனது படப்பிடிப்பை கொண்டாடுவது போல இருக்கிறது. இதில் தனது உடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக கொண்டு செல்வதுபோலவே இருக்கிறது. மகிழ்ச்சியுடன் தனது ஷூட்டிங் பணிகளை தொடர்ந்துவரு சிவராஜ்குமாரின் இந்த வீடியோ தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி – கிருத்திகா உதயநிதி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

நடிகர் சிவராஜ்குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் பெத்தி. நடிகர் ராம் சரண் நடிக்க, இயக்குநர் புச்சி பாபு சனா இதை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 5ம் தேதியில் வெளியான நிலையில், கிட்டத்தட்ட ரூ 400 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார் “கௌருநாய்டு” என்ற, ராம் சரணின் குஸ்தி கோச்சாக நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us