AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடங்கியது அபிஷன் – சிவராஜ்குமார் பட ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ

Abishan Jeevinth and Shivarajkumar movie shoot begins | தமிழ் சினிமாவில் இயக்குநராக ஹிட் கொடுத்த பலர் தற்போது தொடர்ந்து நடிகராக படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள அபிஷன் ஜீவிந்த் தனது இரண்டாவது படத்தின் ஷூட்டிங்க் பணிகளை தொடங்கி விட்டார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொடங்கியது அபிஷன் – சிவராஜ்குமார் பட ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ
அபிஷன் - சிவராஜ்குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jun 2026 13:24 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் அதிக அளவில் பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்கள் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்கள் பார்த்து சிலாகித்த படங்களை இயக்கிய இயக்குநர்கள் பலர் தொடர்ந்து நடிகர்களாக தற்போது நடித்து வருகின்றனர். இயக்குநராக வரவேற்பைப் பெற்ற அவர்கள் அனைவரும் தொடர்ந்து நடிகராகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அபிஷன் ஜீவிந்த். டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை தமிழ் சினிமாவில் இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இந்தப் படம் தான் இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்த 2026-ம் ஆண்டு நாயகனாக அறிமுகம் ஆனார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆன வித் லவ் படம் திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடங்கியது அபிஷன் – சிவராஜ்குமார் பட ஷூட்டிங்:

அதன்படி அடுத்ததாக அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அப்பா மகன் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் அபிஷன் ஜீவிந்தின் தந்தையாக நடிகர் சிவராஜ் குமார் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை இரண்டு நாட்களுக்கு முன்பு நடைப்பெற்ற நிலையில் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த ஒரு சம்பவம் இனிஉருவ கேலி பண்ண கூடாதுனு முடிவு செய்தேன் – ஊர்வசி ஓபன் டாக்

நடிகர் அபிஷன் ஜீவிந்த் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vignesh Shivan: அதீத நெகடிவ் விமர்சனங்கள்… LIK பட தோல்வி குறித்து வெளிப்படையாக பேசிய விக்னேஷ் சிவன்!

Follow Us