AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடிவுக்கு வந்ததா ஜன நாயகன் சென்சார் பிரச்சனை? டெல்லியில் படக்குழு

Jana Nayagan Movie Censor Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராகி உள்ளார் தளபதி விஜய். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் உருவாகி சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து வெளியாகாமல் உள்ளது ஜன நாயகன் படம்.

முடிவுக்கு வந்ததா ஜன நாயகன் சென்சார் பிரச்சனை? டெல்லியில் படக்குழு
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2026 21:11 PM IST

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் உச்ச நடிகராக வலம் வந்தவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் தென்னிந்திய சினிமாவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமும் அரசியலில் களம் இறங்கும் முடிவிற்கு வந்த தளபதி விஜய் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். அது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது நடிப்பில் இறுதியாக வெளியாவதாக இருந்த ஜன நாயகன் படத்தினை ஆருதலாக நினைத்துக் கொண்டனர். அதன்படி நடிகர் தளபதி விஜயின் இறுதிப் படமாக உருவானது ஜன நாயகன் படம்.

இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது. படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் தொடர்ந்து சென்சார் பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் சென்சார் குறித்த புது தகவல் வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வந்ததா ஜன நாயகன் சென்சார் பிரச்சனை?

சென்சார் சான்றிதழைப் பெறுவதற்காகத் தயாரிப்புக் குழுவினர் புது தில்லியில் உள்ளனர். ஜூன் 19-ஆம் தேதிக்குள் அவர்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் கிடைத்தால், ஜூன் 26-ஆம் தேதியிலேயே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வெளிநாட்டு விநியோகச் சூழல் காரணமாக அது சாத்தியமாகாவிட்டால், அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்குள், அதாவது ஜூலை 3-ஆம் தேதிக்குள் படத்தை வெளியிடுவார்கள். இருப்பினும், அதுவரை CBFC சான்றிதழை வழங்கவில்லை என்றால், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் அவர்கள் பணத்தைத் திரும்ப அளித்துவிடுவார்கள்.

Also Read… இனி அரைமணி நேரமில்ல 1 மணி நேரம்.. விஜய் டிவியில் இனி ஒரு மணிநேரம் வெளியாகும் சீரியல் எது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Simran: அவரது அன்பு.. பணிவு.. நேர்மை அப்படியே இருக்கு.. முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன்!

Follow Us