AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Simran: அவரது அன்பு.. பணிவு.. நேர்மை அப்படியே இருக்கு.. முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன்!

Simran Meets CM Vijay: சினிமாவில் பிரபல நடிகையாக தொடர்ந்து படங்களில் நடித்து அசத்திவருபவர் சிம்ரன். இவர் இன்று 2026 ஜூன் 15ம் தேதியில், தமிழக முதல்வரும், முன்னாள் நடிகருமான விஜயை தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரை நேரில் பார்த்த தருணத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவாக சிம்ரன் பகிர்ந்துள்ளார்.

Simran: அவரது அன்பு.. பணிவு.. நேர்மை அப்படியே இருக்கு.. முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன்!
சிம்ரன் மற்றும் விஜய் சந்திப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Jun 2026 21:08 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் எப்போது பிரபலமான நடிகையாக கருதப்படுபவர் சிம்ரன் (Simran). இவர் சினிமாவில் தொடர்ந்து படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் ஆக்ஷன் நாயகியாக நடித்திருக்கும் விக்ரமின் (Vikram) துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. மேலும் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist family) என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். இப்படமானது சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து நடிகையாக படங்களில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியில், தமிழக முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜயை (CM Vijay) நடிகை சிம்ரன் சந்தித்துள்ளார்.

அவரை நேரில் தனது கணவர் மற்றும் மகன்களுடன் சந்தித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு, திரையில் ஒன்றாக நடித்தவரை முதலமைச்சராக நேரில் பார்த்த தருணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிம்ரன் பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விடுதலை போராளியாக ஆர்யா.. வெளியானது அனந்தன் காடு பட அதிரடி ட்ரெய்லர்!

தமிழக முதல்வர் விஜயை சந்தித்தது குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் சிம்ரன், “பல ஆண்டுகள் ஒன்றாக திரியில் பணியாற்றியபிறகு, மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களை, எனது குடும்பத்துடன் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. பலரையும் அவர்பால் ஈர்த்த அவரது அன்பு, பணிவு மற்றும் நேர்மை இன்னும் அப்படியே உள்ளது. நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பேரார்வமும் தொலைநோக்குப் பார்வையும் ஊக்கமளிக்கின்றன. அவர் தமிழ்நாட்டை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் இவ்வேளையில், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என அந்த பதிவில் அவர் தனது மனமார்ந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீ தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்… தனது குழந்தைகளுடன் முத்த மழையில் அஜித் குமார் – வைரலாகும் போட்டோஸ்

சிம்ரன் மற்றும் விஜய் இணைந்து நடித்திருந்த படங்கள்:

நடிகர் சிம்ரன் மற்றும் விஜய் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். தளபதி விஜய்க்கு திரியில் சரியான ஜோடியென்றால் அதில் முதலில் இருப்பவர் சிம்ரன்தான். இவர்கள் இருவரும் ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, உதயா போன்ற படங்களில் நடித்துள்ளனர். இதில் யூத் படத்தில் தளபதி விஜய்யுடன் சிம்ரன் சிறப்பு நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us