Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Simran : காலத்தால் அழியாதவை.. ரஜினிகாந்த்தை சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி!

Simran Meets Rajinikanth : தமிழ் சினிமாவில் 90கள் மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் சிம்ரன். இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். அவரை சந்தித்த தருணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார்.

Simran : காலத்தால் அழியாதவை.. ரஜினிகாந்த்தை சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி!
சிம்ரன் மற்றும் ரஜினிகாந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Aug 2025 16:27 PM

நடிகை சிம்ரன் (Simran) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். அதுவும் தளபதி விஜய் மற்றும் சிம்ரன் ஜோடியாக நடித்திருந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.  அதைத் தொடர்ந்து நடிகை சிம்ரன் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.  இவரின் நடிப்பில், இறுதியாக டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற படம் வெளியானது. அதில் சிம்ரன் , நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமானது கடந்த 2025, மே மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. சுமார் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், நடிகை சிம்ரன், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை (Rajinikanth) நேரில் சந்தித்துள்ளார். அவரை நேரில் சந்தித்த தருணம் குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : மீண்டும் இணைந்த மத கஜ ராஜா கூட்டணி.. ‘விஷால்35’ படத்தில் அஞ்சலி!

நடிகை சிம்ரன் பகிந்த எக்ஸ் பதிவு :

நடிகை சிம்ரன் இந்த பதிவில், “சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு அழகான தருணம் கிடைத்ததற்காக நன்றிகள். மேலும் இந்த சந்திப்பை கூலி மற்றும் டூரிஸ்ட் பேமிலி படங்களின் வெற்றி இன்னும் சிறப்பானதாக மாற்றியது” எனவும் நடிகை சிம்ரன் அந்த பதிவில், தனது நெகிழ்ச்சி தருணத்தை பகிர்ந்துள்ளார். தற்போது நடிகை சிம்ரனின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தீபாவளிக்கு ரிலீஸாகும் 2 படங்கள்.. கவனம் பெறும் பிரதீப் ரங்கநாதன்!

சிம்ரன் மற்றும் சூப்பர் ஸ்டார் இணைந்து நடித்த படம் :

நடிகை சிம்ரன், ரஜினிகாந்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இதில் ரஜினிகாந்த்துடன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். இந்த படமானது ரஜினிகாந்த்திற்கு வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் சூப்பர் ஹிட் படமாக பேட்ட அமைந்திருந்தது.