Dude Vs LIK: தீபாவளிக்கு ரிலீஸாகும் 2 படங்கள்.. கவனம் பெறும் பிரதீப் ரங்கநாதன்!
Pradeep Ranganathans Double Diwali Release : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் டியூட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என இரு படங்கள் உருவாகியுள்ளது. இந்த இரு படங்களும், 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

கோமாளி (Comali) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்ககநாதன் (Pradeep Ranganathan). தனது இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர், தனது இயக்கத்தில் இரண்டாவது வெளியான லவ் டுடே (Love Today) என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இவர் இயக்குநராக மற்றும் நடிகராக நடித்திருந்த லவ் டுடே படமும் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இதை அடுத்ததாக, மேலும் இவர் கதாநாயகனாகவே படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் டிராகன் (Dragon). கடந்த 2025 பிப்ரவரி இறுதியில் இப்படமானது வெளியானது. இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து, சுமார் ரூ.200 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இப்படத்தை அடுத்ததாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) மற்றும் டியூட் (Dude) என இரு படங்களில் நடித்து வந்தார்.
இந்த இரு திரைப்படங்களின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படங்ககள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது வரும் 2025, அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகிறது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் நிலையில், இப்படத்தை அடுத்ததாக பிரதீப் ரங்ககநாதன் நடித்துள்ள டியூட் படமும் வெளியாகவுள்ளது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.




இதையும் படிங்க : கூலியில் மோனிகா பாடல் வைக்க காரணம் இதுதான்…. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு :
A Love Festival Loading this Diwali !#LoveInsuranceKompany hitting the big screens this Diwali on October 17th.#liK @pradeeponelife #VigneshShivan @iam_SJSuryah @IamKrithiShetty @anirudhofficial #RaviVarman @iYogiBabu @Gourayy @PradeepERagav @PraveenRaja_Off @SonyMusicSouth pic.twitter.com/yDm0Z60iQo
— Rowdy Pictures (@Rowdy_Pictures) August 21, 2025
2025 தீபாவளியில் வெளியாகும் பிரதீப் ரங்ககநாதனின் இரு படங்கள் :
இது வரை கோலிவுட் சினிமாவில் ஆண்டுகளுக்கு நடிகர்களின் 2 படங்கள் வெளியாகி பார்த்திருப்போம். ஆனால் ஒரே நேரத்தில் 2 படங்கள் வெளியாகி யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவுதான். அந்த விதத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் மற்றும் டியூட் படமும் இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் நிலையில், டியூட் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க : எனக்கு அதில் பிரச்னை இல்லை.. கூலி பட விமர்சனங்களுக்கு ஆமிர் கான் பதில்!
இந்த இரு படங்களும் மிக பிரம்மாண்ட கதைக்களம் கொண்டு உருவாகியிருக்கும் நிலையில் , எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் டியூட் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இந்த இரு படங்களும் தீபாவளிக்கு வெளியானால், இந்த 2025ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 3 படங்கள் வெளியாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.