Lokah : கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ – வெளியான சூப்பர் அப்டேட் !
Lokah Movie Update : தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மற்றும் நடிகர் நஸ்லேன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லோகா. தற்போது இப்படத்தினை பற்றிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) நடிப்பில் உருவாகி வரும் படம் லோகா. இவருடன் இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் (Naslen) முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அதிரடி ஆக்ஷ்ன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் நஸ்லேன் சன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது தற்போது வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது. இப்படத்தை மலையாள இயக்குநர் டோமினிக் அருண் இயக்கியுள்ளார். மேலும் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
இந்த லோகா படமானது வரும் 2025ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இப்படத்திற்கு சென்சார் குழு “யு/ஏ” தர சான்றிதழைக் கொடுத்துள்ளது. அதன்படி, இப்படத்தைத் திரையரங்குகளில் 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : தனி ஆள் இல்ல… மதுரை மாநாட்டில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை பகிர்ந்த தளபதி விஜய்!
லோகா படக்குழு வெளியிட்ட சென்சார் சான்றிதழ் அறிவிப்பு பதிவு ;
Get ready! Lokah Censored
U/A✅. Stay tuned for more updates!! #Lokah #theyliveamongus#Wayfarerfilms #DulquerSalmaan #DominicArun #KalyaniPriyadarshan #Naslen #SuperheroFantasy #Lokahthefilm #LokahOnam pic.twitter.com/thY2fsaKIh— Wayfarer Films (@DQsWayfarerFilm) August 22, 2025
லோகா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். பெண் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய படம் என்றும் இப்படம் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் நஸ்லேன் முக்கிய வேடத்தில் நடிக்க, தமிழ் நடிகரும், நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டர் வில்லனாக நடித்துள்ளார். இந்த லோகா இடமானது இந்த 2025, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதன்படி இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 24ம் தேதியில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சிரஞ்சீவியின் பிறந்தநாள்.. வெளியானது ‘விஸ்வம்பரா’ படத்தின் தமிழ் கிளிம்ப்ஸ் வீடியோ!
இந்நிலையில், ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, ஆகஸ்ட் 24ம் தேதியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் விழாவைப் படக்குழு பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.