Thalapathy Vijay : தனி ஆள் இல்ல… மதுரை மாநாட்டில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை பகிர்ந்த தளபதி விஜய்!
Thalapathy Vijay Selfie Video :தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் விஜய். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, நேற்று மதுரையில் நடைபெற்றது. அதில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவை தளபதி விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருந்து வருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழ் சினிமாவில் உருவாகிவரும் திரைப்படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது பான் இந்தியத் திரைப்படமாக மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவருகிறது. இப்படமானது தளபதி விஜய்யின் 69வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து தளபதி விஜய், தற்போது முழுமையாக அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு, அவரின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vetri Kalagam) முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
இதை அடுத்ததாக நேற்று 2025, ஆகஸ்ட் 21 ஆம் தேதியில், மதுரையில் (Madurai) இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. முதல் மாநாட்டை ஒப்பிடும்போது, பல லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, தளபதி விஜய் ராம்ப் வாக் செய்யும்போது, ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார். இந்நிலையில், அந்த செல்பி வீடியோவை தற்போது, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனான ஆதி… வைரலாகும் தகவல்!
தளபதி விஜய் பகிர்ந்த செல்பி வீடியோ பதிவு :
View this post on Instagram
இந்த பதிவில் தளபதி விஜய்யை சுற்றியும் லட்சக் கணக்கான தொண்டர்களும், ரசிக்கவும் சூழ்ந்திருந்தனர். இந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் வரும் 2026ம் ஆண்டு தமிழக தேர்தலில் களமிறங்கவுள்ளார். இந்நிலையில், இவர் மதுரை தொகுதியில் நிற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தளபதி விஜய்யின் மதுரை மாநாட்டின் டிவி நேரலையில் ‘மதராஸி’ பட விளம்பரம்.. என்ன காரணம்?
ஜன நாயகன் திரைப்படம் :
தளபதி விஜய் ஜன நாயகன் படத்தைத் தொடர்ந்து, 2 ஆண்டிற்கு ஒரு படமாவது தளபதி விஜய் நடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது தளபதியின் கடைசி படம் என அழைக்கப்பட்டுவரும் ஜன நாயகன் படம் வரும் 2026, ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இப்படமானது அரசியல் கதைக்களம் கொண்ட படமாகத்தான் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிச்சயமாக கோலிவுட் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ஜன நாயகன் படம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.