Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

R.Parthiban: தனுஷின் வேகம்.. மிரண்டு போன பார்த்திபன்.. என்ன சொன்னார் பாருங்க!

R Parthiban Praises Dhanush : தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் ஆர். பார்த்திபன். இவர் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷின் இட்லி கடை படத்தில் அவருடன் நடித்தது குறித்தும், அவரின் இயக்கம் குறித்தும் பாராட்டிப் பேசியுள்ளார்.

R.Parthiban: தனுஷின் வேகம்.. மிரண்டு போன பார்த்திபன்.. என்ன சொன்னார் பாருங்க!
ஆர். பார்த்திபன் மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Aug 2025 09:55 AM

நடிகர் ஆர். பார்த்திபன் (R. Parthiban) தமிழ் சினிமாவில் சிறப்பான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பிலும் இயக்கத்திலும், பல்வேறு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2000ம் ஆண்டுகள் துவக்கத்தில் இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் டீன்ஸ் (Teenz). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஆர். பார்த்திபன் முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பைக் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து இவர் தனுஷின் (Dhanush) இட்லி கடை (Idly Kadai )படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஆர் . பார்த்திபன் தனுஷின் திறமைகள் குறித்தும், அவரிடம் பார்த்து ரசித்த விஷயத்தைப் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார். அவர், நடிகர் தனுஷின் படம் இயக்கும் விதத்தைக் கண்டு ரசித்ததாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தளபதி விஜய்யின் மதுரை மாநாட்டின் டிவி நேரலையில் ‘மதராஸி’ பட விளம்பரம்.. என்ன காரணம்?

இட்லி கடை படக்குழு இறுதியாக வெளியிட்ட பதிவு :

தனுஷை பாராட்டிப் பேசிய இயக்குநர் ஆர். பார்த்திபன் :

அந்த நேர்காணலில் நடிகர் ஆர். பார்த்திபனிடம் இட்லி கடை படம் குறித்தும், தனுஷ் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ” நான் இட்லி கடை படத்தில் நடிக்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷை பயங்கரமாக ரசிக்கிறேன். தனுஷ்  எனக்கு தெரிந்த விதத்தில் மிகவும் வேகமான இயக்குநர். படத்தில் ஒரு நாளைக்கு 2 காட்சிகள் எடுக்கவேண்டும் என்றால், அதை எவ்வாறு எடுக்கவேண்டும், ஒரு 10 பெரிய ஆர்ட்டிஸ்ட் இருந்தாலும் அவர் நடித்துக் காட்டுவார். எனக்கு இந்த மாதிரி வேண்டும் என நடித்துக் காட்டுவார். அவரும் என்னைப் போலவே, வழக்கமாக இப்படித்தானே செய்வார்கள், நாம் ஏன் மாற்றிச் செய்யக்கூடாதா எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க : லியோ படத்தில் என் கதாப்பாத்திரத்தை கேட்டதும் பயந்துட்டேன் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி!

நானும் இட்லி கடை ஷூட்டிங் செட்டிற்கு போனாலே, எனக்கு ஒரு உற்சாகத்தைத் தருகிறது. அவரிடம் ரசித்த ஒரு விஷயம், அவரிடம் ஸ்கிரிப்ட் பேப்பர் எதுவுமே வைத்திருக்கமாட்டார். அழகாக  இரண்டு காட்சி என்றால், அந்த இரண்டு காட்சிகளையும் வேகமாக எடுத்துவிடுவார். மேலும் அவரும் ஆங்கில படத்தில் நடிக்கிறார், ஹிந்தி படத்தில் நடிக்கிறார், தமிழ்ப் படத்திலும் நடிக்கிறாரு மற்றும் 4 படங்களை இயக்கவும் செய்கிறார். இவ்வளவு வேகம் என்னிடம் அப்போது கிடையாது, அவரின் வேகத்தை பார்த்துத்தான் நான் மிகவும் ரசிக்கிறேன் என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் , நடிகர் தனுஷை புகழ்ந்துள்ளார்.