Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Idly Kadai : ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

Idly Kadai Movie Audio Launch Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 4வது படம் இட்லி கடை. இப்படமானது வெளியீட்டிற்குத் தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Idly Kadai : ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
தனுஷின் இட்லி கடை திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Aug 2025 15:38 PM

தென்னிந்திய சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush).  மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி  மொழிகளிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகராக மட்டும் இல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறன் கொண்டவராக இருக்கிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை 3 படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் நான்காவதாக இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படத்தில் தனுஷ் முன்னணி நடிகராக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen)நடித்துள்ளார். மேலும் இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில் இப்படத்தில் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . இந்த படமானது வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பதைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி… இந்தியாவில் எப்போது புக்கிங் ஓபன் ஆகுது தெரியுமா?

இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வரும் 2025 , செப்டம்பர் 12ம் தேதியில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சியானது மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்துப் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இட்லி கடை திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது?

நடிகர் தனுஷின் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகியிருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தில் முதல் பாடல் கடந்த 2025, ஜூலை 27 ஆம் தேதியில் வெளியாகியிருந்தது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்பாடலானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த பாடலை தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியிருந்தனர். இந்த பாடலை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அந்த மாதிரி பாடலுக்கு டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும் – நடிகை பூஜா ஹெக்டே!

இட்லி கடை படக்குழு வெளியிட்ட சமீபத்திய பதிவு :

இந்த இரண்டாவது பாடலானது மிக பிரம்மாண்டமாக தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் இணைந்து நடனமாடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கிராமத்து உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படலானது இந்த 2025  ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.