வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி… இந்தியாவில் எப்போது புக்கிங் ஓபன் ஆகுது தெரியுமா?
Coolie Ticket Booking : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. வெளி நாடுகளில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு படு ஜோராக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தியாவில் எப்போது டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வேட்டையன். இந்தப் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து கலக்கி இருப்பார் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடத் தொடங்கியது. அதன்படி படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் தொடர்ந்து வெளியாகும் போது ரசிகர்களிடையே கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி கூலி படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.




வெளி நாடுகளில் சக்கைபோடு போடும் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் தற்போது உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்னதாக வெளியிட்ட இந்தியப் படங்களை விட கூலி படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதன்படி வெளிநாடுகளில் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் படத்தை வெளியிட ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதி கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அதன்படி வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவில் கூலி படம் மாஸ் காட்டி வருகின்றது.
இந்தியாவில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது?
வெளிநாடுகளில் விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில் இந்தியாவில் எப்போது டிக்கெட் முன்பதிவு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பர்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை 8-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் டிக்கெட் புக்கிங் ஓபனாகிறது என்று தெரிவித்துள்ளது.
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஹிட் படமான சீதா ராமம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
கேரளாவில் நாளை புக்கிங் ஓபனாகிறது என்றால் தமிழகம் உட்பட இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Coolie Kerala Bookings opening tomorrow at 10:30 AM pic.twitter.com/ITc1u9W5x8
— Coolie Team (@CoolieTeam) August 7, 2025