3 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஹிட் படமான சீதா ராமம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Sita Ramam Movie: நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்து திரையரங்குகளில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் சீதா ராமம். இந்தப் படம் இன்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது காண்போம்.

இயக்குநர் ஹனு ராகவபுடி எழுதி இயக்கியுள்ள படம் சீதா ராமம். நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நாயகனாகவும் நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur) நாயகியாகவும் நடித்து இருந்த இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுமந்த், தருண் பாஸ்கர், சச்சின் கெடேகர், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சத்ரு, வெண்ணிலா கிஷோர், பூமிகா சாவ்லா, ருக்மணி விஜயகுமார், ஜிசு சென்குப்தா, அபிநயா, முரளி சர்மா, அஸ்வத் பட், தின்னு ஆனந்த், சுனில், பிரியதர்ஷி புலிகொண்டா, ரோகிணி, ராகுல் ரவீந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாவின் கீழ் தயாரிப்பாளர் அஸ்வனி தத் தயாரித்து இருந்தார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. அதே போல படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




சீதா ராமம் படத்தின் கதை என்ன?
இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் ராம் (துல்கர் சல்மான்) குடும்பம் எதுவும் இல்லாத ஒருவர். இவர் தனது நாட்டுக்காக பணியாற்றி வரும் நிலையில் அங்கு மற்ற ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து அவர்களின் குடும்பங்களில் இருந்து கடிதங்கள் வருகின்றது. அதனைப் பார்க்கும் ராமிற்கு தனக்கும் குடும்பம் இருந்திருந்தால் அவர்களிடம் இருந்து இப்படி கடிதம் வரும் என்று ஏங்குகிறார்.
இப்படி இருக்கும் சூழலில் ராணுவ வீரர்களை ரேடியோ ஒன்றில் இருந்து பேட்டி எடுக்க ஒருவர் வருகிறார். அவரிடம் இப்படி ஒரு ராணுவ வீரருக்கு குடும்பம் இல்லை என்பது குறித்து பேச அந்த ரேடியோவில் வேலை செய்பவர் தனது நிகழ்ச்சியில் அதனைத் தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து ராமிற்கு இந்தியாவில் பல இடங்களில் இருந்து கடிதங்கள் வந்து குவிகின்றது.
அதனைப் பார்க்கும் ராமிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிறது. அதில் சீதா மகாலட்சுமி என்ற பெயரில் மட்டும் கடிதங்கள் தொடர்ந்து வருகிறது. அந்த பெண்ணை காதலிக்க தொடங்குகிறார் ராம். பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களின் காதலை திரையரங்குகளில் பார்த்தவர்கள் கொண்டாடினர். இறுதியில் இவர்களின் காதல் இணைந்ததா இல்லையா என்பதே கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.
Also Read… எனக்கு முகப்பருக்கள் வந்தால் இதுதான் செய்வேன் – நடிகை தமன்னா பாட்டியா சொன்ன விசயம்!
சீதா ராமம் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
For the love of cinema. For the love of love.
Celebrating 3 years of #SitaRamam with all our hearts. 💕🫶Thank you for embracing this journey with unconditional love.@dulQuer @mrunal0801 @iamRashmika @iSumanth @hanurpudi @Composer_Vishal @VyjayanthiFilms @SwapnaCinema pic.twitter.com/KPgpjyNtTi
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) August 5, 2025