Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எனக்கு முகப்பருக்கள் வந்தால் இதுதான் செய்வேன் – நடிகை தமன்னா பாட்டியா சொன்ன விசயம்!

Tamannaah Bhatia: நடிகை தமன்னா பாட்டியா பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் தனது முகத்தில் வரும் பருக்களை எப்படி சரி செய்வேன் என்று கூறியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

எனக்கு முகப்பருக்கள் வந்தால் இதுதான் செய்வேன் – நடிகை தமன்னா பாட்டியா சொன்ன விசயம்!
நடிகை தமன்னா பாட்டியாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2025 17:43 PM

கடந்த 200-ம் ஆண்டு முதல் இந்தி சினிமவில் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா பாட்டியா (Actress Tamannaah Bhatia). இந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழில், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார். 2006-ம் ஆண்டே தமிழ் சினிமாவில் இவர் அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப் படத்தில் இவர் நாயகி இல்லை வில்லியாக நடித்து இருந்தார். தமிழில் அறிமுகம் ஆன முதல் படம் வில்லியாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியான கல்லூரி படம் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகை தமன்னா தமிழில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியளில் இணைந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நாயகர்களின் ஜோடியாக கமிட்டாகி பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கினார் நடிகை தமன்னா பாட்டியா.

நடிகை தமன்னா நடிப்பில் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்தப் படங்கள்:

நடிகை தமன்னா பாட்டியாவின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தப் படங்கள் தமிழில் ஏராளம். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த படிக்காதவன், வேங்கை மற்றும் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்த அயன், நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடித்த பையா, சிறுத்தை மற்றும் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடித்த வீரம், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த தர்மதுரை ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முகப்பருப்பளுக்கு இதுதான் என் ட்ரீட்மெண்ட்:

இந்த நிலையில் நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முகத்தில் வரும் பருக்களை நீக்க எந்தவிதமான மருத்துவ உதவிகளையும் நாடியதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த பருக்களை போக்க காலையில் எழுந்த உடனே வாயில் தண்ணீர் படுவதற்கு முன்பு இருக்கும் எச்சிலை எடுத்து அந்த பருக்கள் மீது வைப்பதாகவும். அப்படி செய்வதால் தனது முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்துவிடுவதாகவும் நடிகை தமன்னா பாட்டியா தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… பர்த்டே பேபி மாளவிகா மோகனனின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சங்கள் தெரியுமா?

நடிகை தமன்னா சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Also Read… எனது படங்களில் அந்தப் படத்தை 2-வது பாகம் எடுத்தால் மகிழ்ச்சி – நடிகர் சிவகார்த்திகேயன்