Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ராஞ்சனா படத்தின் ரீ ரிலீஸில் ஏஐ க்ளமேக்ஸ் என்னை மிகவும் வருத்தமடைய செய்தது – தனுஷ்!

Actor Dhanush About Raanjhanaa AI Ending: நடிகர் தனுஷ் நடிப்பில் இந்தியில் முன்னதாக வெளியான ராஞ்சனா படத்தை தயாரிப்பு நிறுவனம் ஏஐ உதவியுடன் க்ளைமேக்ஸை மாற்றி அமைத்து தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளது. இதற்கு படத்தின் இயக்குநரும் படத்தின் நடிகரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

ராஞ்சனா படத்தின் ரீ ரிலீஸில் ஏஐ க்ளமேக்ஸ் என்னை மிகவும் வருத்தமடைய செய்தது – தனுஷ்!
ராஞ்சனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2025 11:06 AM

பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Director Anand L Rai) இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ராஞ்சனா. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தனுஷ் இந்தி சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராஞ்சனா படத்தில் நடிகை சோனம் கபூர் நாயகியாக நடிக்க அவர்களுடன் இணைந்து நடிகர்கள் அபய் தியோல், முகமது ஜீஷன் அய்யூப் மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரொமாண்டிக் ட்ராமாவாக உருவான இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கிருஷிகா லுல்லா தயாரித்து இருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றி தயாரிப்பு நிறுவனம் படத்தை சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்து இருந்தது.

ராஞ்சனா படத்தில் ஏஐ கிளைமேக்ஸை எதிர்க்கும் தனுஷ்:

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த ராஞ்சனா படத்தில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவான க்ளைமேக்ஸ் காட்சியை ஏஐ உதவியுடன் மாற்றி அமைத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தை ரீ ரிலீஸ் செய்து இருந்தது. இதனைக் கண்டித்து இயக்குநர் ஆனந்த் எல் ராய் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வந்தது.

இந்த நிலையில் படத்தின் நாயகனாக தனுஷ் தனது எதிர்ப்பை தற்போது பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, ராஞ்சனா படத்தின் மறு வெளியீடும், அதன் கிளைமாக்ஸும் மாற்றப்பட்டதும் என்னை முற்றிலும் தொந்தரவு செய்துள்ளது.

Also Read… இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா

இந்த மாற்று முடிவு படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது, மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் எனது தெளிவான ஆட்சேபனையை மீறி அதைத் தொடர்ந்தனர். இது 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் அல்ல. திரைப்படங்கள் அல்லது உள்ளடக்கத்தை மாற்ற AI ஐப் பயன்படுத்துவது கலை மற்றும் கலைஞர்கள் இருவருக்கும் ஆழ்ந்த கவலைக்குரிய முன்னுதாரணமாகும்.

இது கதைசொல்லலின் நேர்மையையும் சினிமாவின் மரபையும் அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன் என்று நடிகர் தனுஷ் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!