தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!
Actress Meena: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு முன்னணி நடிகர்களின் நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக கலக்கியது போல இவரது மகள் நைனிகாவும் தெறி படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தமிழ் சினிமாவில் ரஜினி அங்கில் என்ற டயலாக் மூலம் பிரலம் ஆனவர் நடிகை மீனா (Actress Meena). ரஜினிகாந்த் உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா பிற்காலத்தில் அவருக்கே ஜோசியாக பலப் படங்களில் நடித்து அசத்தி இருந்தார். தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நூற்றுக்கும் அதிமகான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை மீனா. திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் பிறகு அவ்வபோது நாயகியாக இல்லாமல் மற்றக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் தன்னைப் போலவே தனது மகளையும் குழந்தையாக இருக்கும் போதே தெறி படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நடிகையாக அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் தெறி. நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சமந்தா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஏமி ஜாக்சன், நைனிகா, ராதிகா சரத்குமார், மகேந்திரன், பிரபு, மொட்டை ராஜேந்திரன், அழகம்பெருமாள், காளிவெங்கட், ஸ்ரீகுமார், மனோபாலா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தெறி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் தெறிக்கவிட்ட நைனிகா:
அதன்படி நடிகை மீனா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது மகள் நைனிகா தெறி படத்தில் எப்படி நடித்தார் என்ற அனுபவம் குறித்த முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி தெறி படத்தின் முதல் நாள் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக நானும் நைனிகாவும் டயாலாக்கை பிராக்டிஸ் செய்துகொண்டிருந்தோம்.



Also Read… ஜன நாயகன் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்தது இதுதான் – நடிகர் டீஜே சொன்ன விசயம்
அப்படி செய்யும் போது விஜய் டயலாக் நான் பேசுவேன். நைனிகாவோடத அவங்களே பேசுவாங்க. இப்படி பேசி பேசி நைனிகா நல்லா பழகிட்டாங்க. அப்பறம் டேக் எடுக்குறதுக்கு முன்னாடி விஜய் கூட ஒருதடவ பிராக்சிஸ் பண்ணாங்க. சரி டேக் போலாம் என்று அந்த முதல் காட்சியை எடுக்கும் போது விஜயும் நைனிகவும் மாத்தி மாத்தி அவங்க போர்ஷன ஒரே டேக்ல முடிச்சுட்டாங்க. நைனிகா பேசுனது விஜய்க்கு ஷாக்காடுச்சு. என்னங்க இதுனு என்னப்பாத்து கேட்டாரு. நானும் எனக்கும் தெரியலங்கனு சொன்னேன் என்று நடிகை மீனா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.