Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Theatre Release Movies List: தமிழ் சினிமாவில் இந்த ஜூலை மாதம் 2025-ம் ஆண்டின் கடைசி வாரத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சின்ன சின்ன பட்ஜெட்டில் உருவான படங்களின் வெளியீட்டு எண்ணிக்கை இந்த வாரம் அதிகரித்தே காணப்படுகின்றது. அந்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2025 19:38 PM

பிளாக் மெயில்: நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கிங்ஸ்டன். இந்தப் படம் ரசிகர்களிடையே கவலையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பிளாக் மெயில். இந்தப் படத்தை இயக்குநர் மு.மாறன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக், பிந்து மாதவி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் முத்துகுமார் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 1-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிளாக் மெயில் படத்தின் ட்ரெய்லர் இதோ:

ஹவுஸ் மேட்ஸ்: ஹாரர் காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த ஹவுஸ் மேட்ஸ் படத்தை இயக்குநர் ராஜவேல் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் நாயகனாக நடிக்க நடிகர்கள் அர்ஷா சாந்தினி பைஜூ, காளி வெங்கட், வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் தயாரித்து உள்ளது. இந்தப் படம் படம் வருகின்ற 1-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஹவுஸ் மேட்ஸ் படத்தின் ட்ரெய்லர் இதோ:

மிஸ்டர். ஜூ கீப்பர்: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டு தமிழக ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமான நபராக மாறியவர் புகழ். இவர் தற்போது கொலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். அப்படி இவர் நடித்த படம்தான் மிஸ்டர். ஜூ கீப்பர். இந்தப் படத்தில் நடிகர் புகழ் உடன் இணைந்து நடிகர்கள் சிங்கம் புலி, ஷிரின் காஞ்சவாலா, மாரிமுத்து,  பிரமிட் குமார் மற்றும் இம்மான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் இறுதியாக இந்தப் படம் வருகின்ற 1-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மிஸ்டர். ஜூ கீப்பர் படத்தின் ட்ரெய்லர் இதோ:

சரண்டர்: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே அறிமுகம் ஆனவர் நடிகர் தர்ஷன். இலங்கை தமிழரான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் கூகுள் குட்டப்பா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நாடு என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. தற்போது நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் சரண்டர். இயக்குநர் கவுதமன் கணபதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் லால், முனிஷ்காந்த், சுஜித் சங்கர், மன்சூர் அலிகான், விபின் ஜோஸ் மற்றும் பதினே குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 1-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சரண்டர் படத்தின் ட்ரெய்லர் இதோ: