உங்களுக்கு ஆக்ஷன் த்ரில்லர் பிடிக்குமா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் ஆஃபிசர் ஆன் டியூட்டி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
Officer on Duty: சினிமாவில் எல்லாருக்கும் எல்லா படமும் பார்க்க பிடிக்காது. சிலருக்கு காதல் ரொமான்ஸ் பார்க்க பிடிக்கும். சிலருக்கு ஆக்ஷன் ட்ராமா பிடிக்கும். சிலருக்கு ஹாரர் சிலருக்கு த்ரில்லர். அப்படி ஒவ்வொரு ஜானருக்கும் சினிமாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் தான் ஆஃபிசர் ஆன் டியூட்டி.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் குஞ்சாக்கோ போபன் (Kunchacko Boban). இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஆஃபிசர் ஆன் டியூட்டி. இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடிக்க நடிகை பிரியா மணி (Priya Mani) நாயகியாக நடித்து இருந்தார். இவரகளுடன் இணைந்து நடிகர்கள் விஷக் நாயர், ஜெகதீஷ், மீனாட்சி அனூப், எய்தல் எவானா ஷெரின், வைசாக் சங்கர், விஷ்ணு ஜி வாரியர், ரம்ஜான் முஹம்மது, லியா மம்மன், ஐஸ்வர்யா ராஜ், அமித் ஈபன் என பலர் இந்தப் படத்தில் நட்டித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஜித்து அஷ்ரப் இயக்கி இருந்தார்.
இது இவர் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைக் கொடுத்தனர். மேலும் இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




ஆஃபிசர் ஆன் டியூட்டி படத்தின் கதை என்ன?
கேரளாவில் டிஒய்எஸ்பி – யாக இருந்த நடிகர் குஞ்சாக்கோ போபன் பணியில் இருந்த போது செய்த ஒரு தவறு காரணமாக பணி குறைவு செய்யப்பட்டு சிஐ – யாக பணிசெய்து வருகிறார். படம் இவரைச் சுற்றியே தொடங்குகிறது. இப்படி இருக்கும் சூழலில் தான் நகைக்கடையில் வாங்கிய தங்கத்தை அடகு வைக்க சென்ற நபரிடம் அது போலி நகை என்று கூற அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருகிறார். அந்த புகாரை விசாரிக்க சென்ற குஞ்சாக்கோ போபன் அந்த நகையை மாற்றியது புகார் அளிக்கவந்தவரி மகள் தான் என்பதை அறிந்துகொள்கிறார்.
அதனைத் விசாரிக்க தொடங்கிய போது முன்னதாக குச்சாக்கோ போபனின் மூத்த மகள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்ததிற்கும், கர்நாடகாவில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழந்ததிற்கும் தன்னுடன் பணியாற்றிய காவல் துறை அதிகாரியின் மகள் தற்கொலை செய்துக்கொண்டதற்கும் ஒரு சம்மந்தம் இருப்பதை அறிந்துகொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவங்களுக்கு எல்லாம் காரணம் பெங்களூருவில் இருக்கும் ஒரு போதைப் பொருள் விற்கும் கும்பல் என்பதை அறிந்துகொண்டு அவர்களை தேடி செல்கிறார்ல். அங்கு அவர்களை கண்டுபிடித்தாரா அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
ஆஃபிசர் ஆன் டியூட்டி படத்தின் எக்ஸ் தள பதிவு:
OFFICER ON DUTY was a relentlessly paced investigative thriller. Super focused, super tight. 20 minutes in and it feels like you are watching the second half of a movie. Good one. pic.twitter.com/v0hXsnCWeK
— Ram Venkat Srikar (@RamVenkatSrikar) March 20, 2025
Also Read… டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பிரச்னை – இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்