Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பிரச்னை – இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Tourist Family: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படமாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமி. தமிழ் மட்டும் இன்றி பான் இந்தியா அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை இயக்குநர் பகிர்ந்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பிரச்னை – இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
டூரிஸ்ட் ஃபேமிலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2025 20:07 PM

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director Abishan Jeevinth) இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்து இருந்தார். சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் மகன்களாக நடிகர்கள் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் இருவரும் நடித்து இருந்தனர்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஷூட்டிங் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்:

இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் போது ராமேசுவரத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படப்பிடிப்பு ராமேசுவரத்தில் நடந்துகொண்டு இருந்த போது அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

அப்போது படத்திற்காக வரவலைக்கப்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்டுகளில் போலீஸ் உடையில் இருந்தவர்களை வைத்து அந்த மக்களின் கூட்டத்தை சமாளித்தாகவும் அப்போது அந்த பகுதியின் காவல் துறையில் இருக்கும் உயர் அதிகாரி வந்து யார் இவர்கள் என்று கேட்டதாகவும் அபிஷன் ஜீவிந்த் அந்தப் பேட்டியில் கலகலப்பாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டைப் பெற்ற இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… வெளி நாடுகளில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி – வைரலாகும் பதிவுகள்!

டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 49 படத்தின் ஷூட்டிங் எப்போது?