Thalaivan Thalaivii : விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’… இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
Thalaivan Thalaivii Movie Box Office Collection : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 2 வருடங்களுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் படம் தலைவன் தலைவி. நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படமானது வெளியாகி 3 நாட்களைக் கடந்த நிலையில், திரைப்படத்தின் வசூல் குறித்த படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இவரின் 51வது திரைப்படமாக வெளியாகியிருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த திரைப்படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியுள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் இறுதியாகக் கடந்த 2022ம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியானது. அந்த படத்தைத் தொடர்ந்து 2 வருடங்களுக்குப் பின் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே கூறலாம்.
இப்படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி 3 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், படக்குழு வசூல் விவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படமானது இந்த வார இறுதியில் மொத்தமாக சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ரெட்ரோ நாயகனாக துல்கர் சல்மான்.. வெளியானது காந்தா திரைப்படத்தின் டீசர்!
தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட வசூல் விவரம் குறித்த அறிவிப்பு :
Hearts FULL, theatres FULLER! ❤️#ThalaivanThalaivii delivers a huge weekend gross in Tamil Nadu, and the love continues with housefull shows worldwide ❤️#தலைவன்தலைவி @VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia… pic.twitter.com/eh520rQtom
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 28, 2025
இந்த தலைவன் தலைவி திரைப்படமானது வெளியாகி 3 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், மொத்தமாக சுமார் ரூ 25 கோடிகளை வசூல் செய்துள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பில் மகாராஜா படத்தை தொடர்ந்து, மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் திரைப்படமாக இந்த தலைவன் தலைவி படமானது அமைந்துள்ளது. இப்படத்திற்கு முன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஏஸ் படமானது மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை எனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 49 படத்தின் ஷூட்டிங் எப்போது?
இந்த தலைவா தலைவி திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருந்து. இதில் தமிழ் மொழி படமானது 2025, ஜூலை 25ம் தேதி முதல் வெளியாகியிருந்த நிலையில், தெலுங்கு மொழியில் இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2025ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் நல்ல வசூல் செய்த திரைப்படமாக இந்த தலைவன் தலைவி திரைப்படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.