Thalaivan Thalavii: பெரும் வரவேற்பு.. ‘தலைவன் தலைவி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
Thalaivan Thalavii Movie First Day Collection : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் பாண்டிராஜ். இவரின் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணையானது நடித்திருந்த திரைப்படம் தலைவன் தலைவி. இப்படமானது நேற்று 2025, ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படமானது முற்றிலும் குடும்ப கதைக்களத்துடன் வெளியாகி மக்கள் மத்திய நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithaya Menon) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி காமினேஷன் இந்த படத்தில் மிகவும் அருமையாக வந்திருப்பதாகவும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றன. இவ்வாறு மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்ட இப்படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து, நகைச்சுவை, எமோஷனல் மற்றும் விறுவிறுப்பான கதைகள் என, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்று வருகிறது. இப்படமானது நேற்று 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்ற நிலையில், முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இப்படமானது முதல் நாளில் சுமார் ரூ. 4.15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.




இதையும் படிங்க : LCU-வில் கூலி படம் இல்லை.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!
தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :
Kaadhal, sirippu, and Makkal Selvan-oda mass action! ❤️🔥 #ThalaivanThalaivii — the ultimate family entertainer, now serving in theatres near you! 💥#தலைவன்தலைவி @VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu @Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia… pic.twitter.com/FBspCIDhoi
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 25, 2025
தலைவன் தலைவி திரைப்படத்தின் கதைக்களம் :
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் இந்த படமானது, முற்றிலும் குடும்பமும் சார்ந்த படமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மைய கதையாக விவாகரத்து குறித்து அமைந்துள்ளது. மேலும் இப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து தழுவப்பட்டதாகவும் இயக்குநர் பாண்டிராஜ் கூறியிருந்தார். சாதாரணமாக ஹோட்டல் வைத்திருக்கும் தம்பதியினர், அடிக்கடி சண்டையில் ஈடுபடும்போது, அவர்களுக்குள் தகராறு அதிகரிக்கிறது. இதில் இவர்கள் இருவரின் குடும்பமும் ஈடுபடும் நிலையில், சண்டை பெரியதாக மாறுகிறது. அவர்கள் விவாகரத்து பெற்றார்களா அல்லது இல்லையா என்பதுதான் இப்படத்தின் மைய கதை.
இதையும் படிங்க : பிறந்தநாளை ‘டியூட்’ படக்குழுவுடன் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!
இந்த படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பும் மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. தலைவன் தலைவி படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. இப்படமானது முதல் நாளிலேயே சுமார் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது நாளாக இப்படத்தின் மீதான வரவேற்பது அதிகரித்து வருகிறது. வார இறுதி என்பதால் இப்படம் இன்னும் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.