Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர்… ஆனால் அது விஜய் இல்லை!

தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக தற்போது களம் இறங்கியுள்ளார் ஜேசன் சஞ்சய். இவரது தாத்தா சந்திரசேகர் இயக்குநராகவும் இவரது தந்தை விஜய் நடிகராகவும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். தற்போது ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக கலக்க காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர்… ஆனால் அது விஜய் இல்லை!
ஜேசன் சஞ்சய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Jul 2025 21:03 PM

சினிமாவில் காலம் காலமாக வாரிசுகள் அறிமுகம் ஆவது வலக்கம் தான். அந்த வரிசையில் தற்போது மூன்றாவது தலைமுறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் ஜேசன் சஞ்சய் (Director Jason Sanjay). இவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அவ்வபோது நடிகராகவும் சிலப் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் ஜேசன் சஞ்சையின் தந்தை விஜய் நடிகராக பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இவர் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக இயக்குநராக தற்போது ஜேசன் சஞ்சய் களம் இறங்கியுள்ளார். இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இந்தப் படத்தின் அறிவுப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பக சுபாஸ்கரன் தயாரித்து வரும் நிலையில் படத்தில் நாயகனாக நடிகர் சந்தீப் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஜேசன் சஞ்சய் ஃபாலோ பண்ணும் அந்த நடிகர் யார்?

இந்த நிலையில் இன்று ஜேசன் சஞ்சய் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு படக்குழுவினர் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது தந்தை விஜய் வாழ்த்து பதிவு எதுவும் போடுவாரா என்று ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இதுவரை எதுவும் போடவில்லை.

இதனைத் தொடர்ந்து ஜேசன் சஞ்சயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்கும் போது ஒரு சுவாரஸ்யமான விசயம் தெரியவந்தது. அதில் ஜேசன் தமிழ் சினிமாவில் உள்ள ஒரே ஒரு நடிகரைதான் ஃபாலோ செய்கிறார். ஆனால் அது விஜய் இல்லை விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் சஞ்சயின் இன்ஸ்டா

ஜேசன் சஞ்சயின் இன்ஸ்டா

Also Read… கைதி 2 படத்தில் புது கதாப்பாத்திரங்கள் இருக்கு – லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

ஜேசன் சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா நிறுவனம்:

Also Read… பாமக தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் சேரன் – ராமதாஸாக நடிக்கும் நடிகர் ஆரி!