Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pradeep Ranganathan: பிறந்தநாளை ‘டியூட்’ படக்குழுவுடன் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!

Pradeep Ranganathans Birthday Celebration : நடிகர் பிரதீப் ரங்கநாதன் இன்று 2025, ஜூலை 25ம் தேதியில், தனது 32வது வயது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு டியூட் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது குறித்த புகைப்படங்களைப் படக்குழு இணையதளங்களில் பகிர்ந்துள்ளது.

Pradeep Ranganathan:  பிறந்தநாளை ‘டியூட்’ படக்குழுவுடன் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!
டியூட் படக்குழு Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Jul 2025 22:35 PM

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) 4வது திரைப்படமாக உருவாகி வருவது டியூட் (Dude) திரைப்படம். இந்த படத்தினை தமிழ் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (keerthiswaran) இயக்கிவருகிறார். இவர் இயக்குநர் சுதா கொங்கராவின் முன்னாள் உதவி இயக்குநராவார். இவர் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இந்த டியூட் திரைப்படத்தின் அறிவிப்புகளானது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் ஜோடி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்திலும் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி மற்றும் ஹிருது ஹூரன் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.

இன்று 2025, ஜூலை 25ம் தேதியில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் 32வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இன்று டியூட் படக்குழு (Dude Film Crew) நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாள்… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் இதோ!

டியூட் படக்குழு வெளியிட்ட பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்:

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் 32வது பிறந்தநாளை முன்னிட்டு டியூட் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை மமிதா பைஜூவும் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழு பகிர்ந்திருக்கும் நிலையில், இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தில் தயாரிப்பாளரான நவீன் யெர்னேனியும் , நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து வாழ்த்திய தயாரிப்பாளர் :

இந்த டியூட் திரைப்படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்திலிருந்து வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் உருவாகி வருகிறது. இந்த படமானது வரும் 2025ம் ஆண்டு தீபாவளிக்குப் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : நடிப்பிற்காக எவ்வளவு கடுமையாக உழைக்கவும் நான் தயார் – டிஎன்ஏ பட நடிகை நிமிஷா சஜயன்

ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அடுத்ததாக நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமானது ரிலீசிற்கு தயாராகி வருகிறது. டியூட் படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் எனக் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.