LIK: பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாள்… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் இதோ!
Love Insurance Kompany Movie Glimpse Update : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் பிறந்தநாளான இன்று 2025, ஜூலை 25ம் தேதியில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமானது சிறப்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என்பதை குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragon). கடந்த 2025, பிப்ரவரி மாதத்தின் இறுதியில் வெளியான இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்தாக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் (Vignesh Shivan) இவர் இணைந்த திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த திரைப்படமானது பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில், தமிழில் மூன்றாவதாக உருவாகிவரும் திரைப்படமாகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி (Kirthi Shetty) நடித்துள்ளார். அவர் தமிழில் நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் என்ற புதிய படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா (SJ Srryah), சீமான், கௌரி ஜி கிஷன் எனப் பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படமானது காதல் மற்றும் சைன்ஸ் பிக்ஷன் போன்ற கதைக்களத்துடன் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று 2025 ஜூலை 25ம் தேதியில், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் எனப் படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ரீ- ரிலீசாகும் தனுஷின் ‘புதுப்பேட்டை’ … செல்வராகவன் வெளியிட்ட அறிவிப்பு!
இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்குத் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான “தீமா தீமா” ஏற்கனவே வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இணையதளங்களில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வந்தது.
இதையும் படிங்க : சூர்யாவின் ‘கருப்பு’ படம்… ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!
அதை அடுத்ததாக எஸ். ஜே. சூர்யா மற்றும் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாள்களில் வெளியான எந்த போஸ்டர்களில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இடம்பெறவில்லை. இதனால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை வரும் 2026ம் ஆண்டு காதலர் தினத்தில் படக்குழு ரிலீஸ் செய்வதற்காகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்து குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.